விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 3, ஜிடி 2- 150 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு: ஆண்டு விழா ஸ்பெஷல்!
ரியல்மி ஜிடி 2 மற்றும் ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனானது மே 4 ஆம் தேதி ரியல்மி நான்காம் ஆண்டு விழாவில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் அகமதாபாத்தில் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோர் விரைவில் இந்தியாவில் திறக்கப்பட இருக்கிறது.

ரியல்மி நிறுவனத்தின் முதன்மை சாதனங்கள்
ரியல்மி நிறுவனத்தின் முதன்மை சாதனமான ஜிடி 2 ப்ரோ போன் மற்றும் ரியல்மி புக் பிரைம், ரியல்மி பட்ஸ் ஏர் 3 உள்ளிட்ட பலவற்றை இந்தியாவில் சமீபத்திய நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்வின் முடிவில் ரியல்மி ஜிடி நியோ 3 மற்றும் ஜிடி2 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டது. உலகின் முதல் 150 வாட்ஸ் சார்ஜிங் சாதனம் விரைவில் இந்தியாவிற்கு விரைவில் வர உள்ளதாக இந்திய சிஇஓ மாதவ் ஷெத் டீஸ் செய்துள்ளார். இதன்மூலம் ரியல்மி ஜிடி நியோ 3 விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என உறுதி
அதேபோல் நிறுவனத்தின் நான்காவது ஆண்டு விழாவில் ரியல்மி ஜிடி 2 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற மே 4 ஆம் தேதி இந்த விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல் நிறுவனம் உலகின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோரை விரைவில் இந்தியாவில் திறக்கப்பட போவதாகவும் அறிவித்திருக்கிறது. இந்த ஸ்டோர் ஆனது குஜராத்தின் அகமதாபாத்தில் அமைய இருக்கிறது.
ரியல்மி ஜிடி2 சிறப்பம்சங்கள்
ரியல்மி ஜிடி2 ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 100 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே 1300 நிட்ஸ் உச்ச பிரகாசண், 100% டிசிஐ பி3 வண்ண வரம்பு கவரேஜ் மற்றும் பாதுகாப்பு அம்சத்துக்கு கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனானது 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி
கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. இந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனானது மூன்று கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்66 கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதியோடு வருகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஆதரவு
ரியல்மி ஜிடி 2ஸ்மார்ட்போனானது வைஃபை 6, 5ஜி, ப்ளூடூத் 5.2 மற்றும் என்எஃப்சி இணைப்புகள் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி யூஐ 3.0 உடன் வருகிறது.

ரியல்மி ஜிடி நியோ 3 சிறப்பம்சங்கள்
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி உடனான 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 1000 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்துடன் கூடிய 10-பிட் கலர் மற்றும் செல்பி ஸ்னாப்பருக்கான பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது சமீபத்திய மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மாலி ஜி610 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி யூஐ 3.0 ஆதரவோடு வருகிறது.

50 எம்பி முதன்மை கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், ரியல்மி ஜிடி நியோ 3 சாதனத்தில் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி என மூன்று கேமரா ஆதரவோடு வருகிறது. அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 150 வாட்ஸ் அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4500 எம்ஏஎச் பேட்டரியையும் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications