Home
News

Realme ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி- அறிமுகமான ரியல்மி Thor ஸ்மார்ட்போன்: லிமிடெட் எடிஷன் பாஸ்!

Thor: Love மற்றும் Thunder லிமிடெட் எடிஷன் ரியல்மி GT Neo 3 (150W) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.40,000 விலைப் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

தார் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை இதோ

தார் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை இதோ

ரியல்மி நிறுவனம் Realme GT Neo 3 (150W) Thor: Love and Thunder Limited Edition ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஜூலை 7 (வியாழக் கிழமை) அறிமுகம் செய்துள்ளது. இது லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.42,999 ஆக இருக்கிறது.

விற்பனை தேதி எப்போது, எங்கு வாங்கலாம்?

விற்பனை தேதி எப்போது, எங்கு வாங்கலாம்?

ரியல்மி, பிளிப்கார்ட் மற்றும் குறிப்பிட்ட முக்கிய ஸ்டோர்களில் ஜூலை 13 முதல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தற்போது ரியல்மி.காம் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நைட்ரோ ப்ளூ வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

Thor லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்ன?

Thor லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்ன?

Realme GT Neo 3 (150W) Thor: Love and Thunder Limited Edition இன் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த மாடலின் விலையும் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அசல் Realme GT Neo 3 (150W) விலைக்கு இணையாக இருக்கிறது. ஆம், ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் இதுவாகும். அசல் மாடலை விட குறிப்பிட்ட மேம்பாடுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

ப்ரீமியம் கிஃப்ட் பாக்ஸ் உடன் இந்த ஸ்மார்ட்போன்

ப்ரீமியம் கிஃப்ட் பாக்ஸ் உடன் இந்த ஸ்மார்ட்போன்

Realme GT Neo 3 (150W) Thor லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம். இந்த லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன், ப்ரீமியம் கிஃப்ட் பாக்ஸில் வைத்து வழங்கப்படுகிறது. Thor: Love and Thunder Limited Edition ஸ்மார்ட்போன் பாக்ஸில் Thor தீம் கார்ட்ஸ், வால்பேப்பர், ஸ்டிக்கர்ஸ், மெட்டல்ஸ் மற்றும் சிம் கார்ட் ரிஜெக்ட் பின் உள்ளிட்டவை இருக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

Realme GT Neo 3 (150W) Thor: Love and Thunder Limited Edition ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ரியல்மி யூஐ 3.0 உடனான ஆண்ட்ராய்ட் 12 மூலம் இயக்கப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே ஆனது 6.7 இன்ச் முழு HD+ (1,080x2,412) பிக்சல் தீர்மானத்துடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த டிஸ்ப்ளே 1,000Hz டச் மாதிரி விகிதம் மற்றும் HDR10+ மற்றும் DC டிம்மிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மேம்பட்ட சிப்செட், குளிரூட்டும் தொழில்நுட்ப ஆதரவு

மேம்பட்ட சிப்செட், குளிரூட்டும் தொழில்நுட்ப ஆதரவு

இந்த லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 SoC மூலம் இயக்கப்படுகிறது. காட்சி மென்மையாக இருக்க இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக டிஸ்ப்ளே ப்ராசஸர் வசதியும் இருக்கிறது. ஸ்மார்ட்போன் வெப்பத்தை கட்டுப்படுத்த வேப்பர் குளிரூட்டும் தொழில்நுட்பம் இதில் இருக்கிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

Realme GT Neo 3 (150W) Thor லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 50 எம்பி Sony IMX766 முதன்மை கேமராவானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் இருக்கிறது. அதேபோல் 8 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

150 வாட்ஸ் அல்ட்ரா டார்ட் சார்ஜிங் ஆதரவு

Realme GT Neo 3 (150W) Thor ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 150 வாட்ஸ் அல்ட்ரா டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக ஸ்மார்ட்போனை 5 நிமிடத்தில் 50% வரை சார்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 188 கிராம் ஆகும்.

ஆற்றல் மிக்க மற்றும் துடிப்பான வாடிக்கையாளர்களுக்கு

ஆற்றல் மிக்க மற்றும் துடிப்பான வாடிக்கையாளர்களுக்கு

இந்தியாவில் உள்ள மார்வெல் ரசிகர்களை குறிவைத்து GT Neo 3 150W Thor லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த GT Neo 3 150W ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவின் இளம் ஆற்றல்மிக்க மற்றும் துடிப்பான வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என ரியல்மி இந்தியா சிஇஓ மாதவ் ஷெத் கூறினார்.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 3 (150W) Thor: Love and Thunder Limited Edition Smartphone Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X