83% ரசிகர்கள் விருப்பம் இதுதான்- ரியல்மி ஜிடி நியோ 2 எப்போது அறிமுகம்: அம்சங்கள் வேறலெவல்!

|

ரியல்மி ஜிடி நியோ 2 சாதனத்தின் இந்திய வெளியீட்டு காலம் குறித்து ரியல்மி சிஇஓ டுவிட்டரில் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளார். இவரது பதிவின் மூலம் ஸ்மார்ட்போனின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல்மி சிஇஓ நியோ 2 இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷேத் டுவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி ஜிடி நியோ 2 சாதனத்தின் விற்பனை நவம்பரில் நடக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. ரியல்மி சமீபத்தில் ரியல்மி ஜிடி நியோ 2 என்ற புதிய ஜிடி தொடர் சாதனத்தை சீனாவில் கொண்டு வந்தது. தற்போது இந்திய அறிமுகம் குறித்து ரியல்மி நிறுவன தலைவர் நிர்வாக அதிகாரி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் எனவும் தீபாவளிக்கு அறிமுகமாகும் எனவும் டிப்ஸ்டர் தெரிவிக்கிறது.

83% ரசிகர்களின் விருப்பம்

ரியல்மி சிஇஓ மாதவ் ஷேத் டுவிட்டரில் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளார். நிறுவனம் இந்தியாவில் ரியல்மி ஜிடி நியோ 2 சாதனத்தை எப்போது அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்டார். இதுதொடர்பான வாக்கெடுப்பில் ரசிகர்கள் அக்டோபர் தொடக்கத்தில் அக்டோபர் இறுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் என வாக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது 83% ரசிகர்கள் அக்டோபர் தொடக்கத்தில் ஸ்மார்ட்போன் தொடங்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ரியல்மி நடத்திய வாக்கெடுப்பின்படி இந்த சாதனத்துக்கு ஏணைய ரசிகர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனை

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனை

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனைக்கு பிறகு ரியல்மி ஜிடி நியோ 2 இந்திய வெளியீட்டை டிப்ஸ்டர் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனவும் இது அக்டோபர் 3 அல்லது நான்காவது வாரத்தில் இது நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ 2 விவரக்குறிப்புகள்

ரியல்மி ஜிடி நியோ 2 விவரக்குறிப்புகள்

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் சாம்சங் இ4 டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 + ஆதரவு, 600 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி

புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிபார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி

ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

64 எம்பி பிரைமரி சென்சார்

64 எம்பி பிரைமரி சென்சார்

ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme GT Neo 2 Smartphone Might Launching Soon in India: Teased by Realme CEO

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X