ரியல்மி ஜிடி நியோ 2 விலை இது தானா? எதிர்பார்த்ததை விட கம்மியா இருக்கே..

|

ரியல்மி ஜிடி நியோ 2 (Realme GT Neo2) ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மிரட்டலான புதிய ஸ்மார்ட்போன் சாதனம் அதன் தலைமையில் ஸ்னாப்ட்ராகன் 870 சிப்செட் உடன் வெளியாக வாய்ப்புள்ளது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் மாடலில் டைமன்சிட்டி 1200 சிப்செட் மூலம் இயங்கும் மாடலையும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக இந்த புதிய ஸ்மார்ட்போன் விலை டிப்ஸ்டர் தகவல் மூலம் இணையத்தில் தற்போது கசிந்துள்ளது. இந்த சாதனத்தின் விலை என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை என்னவாக இருக்கும்?

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை என்னவாக இருக்கும்?

இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை இணையத்தில் கசிந்துள்ளது. பிரபலமான டிப்ஸ்டர் முகுல் சர்மா (@stufflistings) வெளியிட்ட அறிக்கையின் படி, வரவிருக்கும் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டி மாடலின் விலை சிஎன்ஒய் 2,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 28,400 ஆகும்.

ஹை எண்டு வேரியண்ட் மாடலின் விலையே இவ்வளவு தானா?

ஹை எண்டு வேரியண்ட் மாடலின் விலையே இவ்வளவு தானா?

இதன் 8 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடிற்கு சிஎன்ஒய் 2,699 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தோராயமாக ரூ. 30,700 ஆகும். இறுதியாக இதன் ஹை எண்டு வேரியண்ட் மாடலான 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு சிஎன்ஒய் 2,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தோராயமாக ரூ. 34,100 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது .

இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

புதிய ரயில்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் சாதனத்தின் சில முக்கிய சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்க்கையில், இந்த சாதனம் 64 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. நாங்கள் முன்பே சொன்னது போல் இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65W சார்ஜிங் ஆகியவற்றுடன் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றொருபுறம், நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனில் இருந்து வரும் சமீபத்திய தகவல்கள் இந்த சாதனம் AI டைமென்சிட்டி 1200 ஏஐ சிப் மூலம் இயக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

டைமன்சிட்டி 1200 சிப்செட் உடன் ரியல்மி ஜிடி நியோ 2 அறிமுகமா?

டைமன்சிட்டி 1200 சிப்செட் உடன் ரியல்மி ஜிடி நியோ 2 அறிமுகமா?

இதன் மூலம் ரியல்மி நிறுவனம், ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் மாடலில் டைமன்சிட்டி 1200 சிப்செட் மூலம் இயங்கும் ரியல்மி ஜிடி நியோ 2 சாதனம் சிறிய 4,500 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்றும் டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். ஆனால், இது ஸ்னாப்டிராகன் பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது 65W பாஸ்ட் சார்ஜ் கொண்ட அதே வேகத்தை இதிலும் வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் ஆதார் விபரத்தை வைத்து வேறு யாரும் சிம் வாங்கினார்களா? நொடியில் அறிந்துகொள்ள உதவும் இலவச சேவை..உங்கள் ஆதார் விபரத்தை வைத்து வேறு யாரும் சிம் வாங்கினார்களா? நொடியில் அறிந்துகொள்ள உதவும் இலவச சேவை..

டிஸ்பிளே அளவு மற்றும் கேமரா விபரம்

டிஸ்பிளே அளவு மற்றும் கேமரா விபரம்

கூடுதலாக, டைமன்சிட்டி 1200 மாறுபாட்டு 16 எம்பி செல்பி கேமராவை ஸ்மார்ட்போனின் இடது மேல் மூலையில் உள்ள ஒரு பஞ்ச் ஹோல் கேமராவை கொண்டிருக்கும் என்று லீக் தகவல் கூறுகிறது. ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் சாதனம் 6.43' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் 120 Hz ஓல்இடி டிஸ்பிளேவை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்னாப்ட்ராகன் சிப்செட் உடன் இயங்கும் ரியல்மி ஜிடி ஜியோ 2 ஸ்மார்ட்போன் சாதனமும் ஒரு 16 எம்பி செல்பி கேமெராவை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

64 எம்பி டிரிபிள் கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் ஸ்கேனர்

64 எம்பி டிரிபிள் கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் ஸ்கேனர்

ஆனால், TENAA தகவல் வேறு ஒரு தகவலைச் சேர்த்துள்ளது, இந்த பதிப்பின் டிஸ்பிளே ஒரு பெரிய 6.62' எ;அளவை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூலத்தால் வெளிப்படுத்தப்பட்ட ஜிடி நியோ 2 இன் டைமென்சிட்டி பதிப்பின் மீதமுள்ள விவரக்குறிப்புகளில் 64 எம்பி டிரிபிள் கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவையும் அடங்கும். இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் 8.4 மிமீ தடிமன் உடன், 186 கிராம் எடையுடன் வெளிவரக்கூடும்.

பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டில் இயங்கும் மாடல்

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டில் இயங்கும் மாடல்

ரியல்மி ஜிடி நியோ 2 சாதனத்தின் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டில் இயங்கும் மாடல் அடுத்த புதன்கிழமை அறிவிக்கப்படுமா அல்லது பின்னர் அறிவிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் அறிவியல் தொடர்பான சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme GT Neo 2 Price Surfaces Online Ahead of Launch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X