டீசர் சொல்லும் உண்மை: ரியல்மி புது சாதனம் இதுதான்., விலை அவ்வளவுதான்- மேம்பட்ட அம்சத்தோடு ரியல்மி ஜிடி நியோ2!
ரியல்மி ஜிடி நியோ 2 இந்திய வெளியீடு திங்களன்று டீஸ் செய்யப்பட்டது. ரியல்மி நிறுவனம் சமூகவலைதளங்களில் ஓரிரு டீஸரை இதுகுறித்து பகிர்ந்துள்ளது. இந்தியாவில் ரியல்மி ஜிடி நியோ 2 வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் எனவும் அதே தினத்தில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. நிறுவனம் இன்னும் குறிப்பிட்ட விவரங்களை இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை. ரியல்மி ஜிடி நியோ 2 ஐரோப்பிய வேரியண்டின் விலை மற்றும் வண்ண விருப்பங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.

ரியல்மி ஜிடி நியோ 2 அம்சங்கள்
ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள சேனல்கள் நாட்டில் வரவிருக்கும் ரியல்மி ஜிடி நியோ 2 குறித்து டீஸ் செய்துள்ளது. டீஸர்களில் புதிய ரியல்மி போனின் சரியான விவரங்கள் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை. 120 ஹெர்ட்ஸ் இ4 அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆகியவை உடனான ரியல்மி பகிர்ந்துள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் ரியல்மி ஜிடி நியோ 2-ன் முக்கிய விவரக்குறிப்புகள் என்பதால் அது ரியல்மி ஜிடி நியோ 2 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ விலை
ரியல்மி ஜிடி நியோ விலை குறித்து பார்க்கையில், டிப்ஸ்டர் சுதன்ஷு அம்போர், மை ஸ்மார்ட் பிரைஸ் உடன் இணைந்து ஐரோப்பாவின் ரியல்மி ஜிடி நியோ 2 விலையை குறிப்பிட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் 369 யூரோவாக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.31,900 ஆகும். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை 459 யூரோவாக இருக்கிறது. இந்திய விலை மதிப்பு ரூ.39,600 ஆக இருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 2 ஐரோப்பாவில் பிளாக், ப்ளூ மற்றும் க்ரீன் வண்ணங்களில் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ 2 இந்திய விலை
ரியல்மி ஜிடி நியோ 2 இந்திய விலை குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இது ஐரோப்பாவின் விலை குறியீட்டையே கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 2 ஆரம்பத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை 2499 சிஎன்ஒய் ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ.28,800 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை 2699 சிஎன்ஒய் ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.31,100 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை 2999 சிஎன்ஒய் ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.34600 ஆக இருக்கிறது.

புதிய ஜிடி தொடர்
ரியல்மி ஜிடி நியோ 2 சாதனத்தின் விற்பனை நவம்பரில் நடக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. ரியல்மி சமீபத்தில் ரியல்மி ஜிடி நியோ 2 என்ற புதிய ஜிடி தொடர் சாதனத்தை சீனாவில் கொண்டு வந்தது. தற்போது இந்திய அறிமுகம் குறித்து ரியல்மி நிறுவன தலைவர் நிர்வாக அதிகாரி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாதனம் அறிமுகத்திற்கு காத்திருக்கும் ரியல்மி ரசிகர்கள்
ரியல்மி சிஇஓ மாதவ் ஷேத் டுவிட்டரில் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளார். நிறுவனம் இந்தியாவில் ரியல்மி ஜிடி நியோ 2 சாதனத்தை எப்போது அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்டார். இதுதொடர்பான வாக்கெடுப்பில் ரசிகர்கள் அக்டோபர் தொடக்கத்தில் அக்டோபர் இறுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் என வாக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது 83% ரசிகர்கள் அக்டோபர் தொடக்கத்தில் ஸ்மார்ட்போன் தொடங்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ரியல்மி நடத்திய வாக்கெடுப்பின்படி இந்த சாதனத்துக்கு ஏணைய ரசிகர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications