Realme GT Neo 2 அறிமுகம் தேதி உறுதியானதா? அதிகம் எதிர்பார்த்த ஸ்மார்ட்போனின் என்ட்ரி இதோ..
இந்தியாவில் Realme GT Neo 2 வெளியீட்டு தேதி அக்டோபர் 13 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு செய்தி குறிப்பு மற்றும் மைக்ரோசைட் மூலம் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் அறிமுகம் அதிகாரப்பூர்வ சேனல்களில் நடைபெறும் ஒரு மெய்நிகர் நிகழ்வு மூலம் அறிமுகப்படுத்தப்படும்.

ரியல்மி ஜிடி நியோ 2 இன் இந்தியா வேரியண்ட்டின் சில விவரக்குறிப்புகள் பிரத்தியேக மைக்ரோசைட் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்ட சாம்சங் இ4 அமோல்ட் டிஸ்ப்ளே இடம்பெறும் என்று ரியல்மி குறிப்பிடுகிறது. Realme ஜிடி நியோ 2 வரும் அக்டோபர் 13 ஆம் தேதி இந்தியாவில் 12:30 மணி இந்திய நேரப்படி YouTube இல் மற்றும் பேஸ்புக் சேனல் மூலம் அறிமுகம் செய்யப்படும்.
மைக்ரோசைட் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்துகிறது. ஸ்மார்ட்போனின் விலை இப்போதைக்குத் தெரியவில்லை. ஆனால் மைக்ரோசைட்டின் படி, ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உடன் இயக்கப்படும். சிப்செட் 12GB ரேம் உடன் ஜோடியாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. இது 256GB கொண்ட ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மைக்ரோசைட் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 65W சூப்பர் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்பதைக் கூறியுள்ளது.

இது 5,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்றும் குறிப்பிடுகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 600 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம் மற்றும் 1300 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் சாம்சங் இ 4 அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே 15 சதவிகிதம் குறைவான மின் நுகர்வு கொண்டதாகவும் கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 2 நியோ பிளாக், நியோ ப்ளூ மற்றும் நியோ கிரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். மேலும், ஸ்மார்ட்போனில் துருப்பிடிக்காத அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது செயலியின் முக்கிய வெப்பநிலையை 18 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
பிற விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி ஜிடி நியோ 2 இன் சீன வகையோடு நாம் இதை சேர்த்துப் பார்க்கலாம். அந்த மாறுபாடு 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருந்தது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது. இந்தியா வேரியண்ட்டில் இதே போன்ற விவரக்குறிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.

உண்மையைச் சொல்லப் போனால், ரியல்மி இந்தியாவில் ஏராளமான புது வாடிக்கையாளர்களை தன் வசம் இழுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் இளசுகளின் கவனம் ரியல்மி பக்கம் திரும்பியுள்ளது. காரணம் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் நேர்த்தியான வடிவமைப்புடன், ட்ரெண்டியான லுக்கில் அனைவரும் வாங்கக்கூடிய எளிமையான விலையில் முக்கிய அம்சங்களுடன் வருகிறது. ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக Realme GT Neo 2 ஸ்மார்ட் போனின் நியோ கிரீன் வண்ண விருப்பத்திற்கு மக்களிடையே அதிக கவனம் இருப்பதாகச் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு பிடித்துள்ளதா? எதனால் இந்த சாதனம் உங்களுக்குப் பிடித்துள்ளது என்று எங்களுக்கு உங்களின் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். தொழில்நுட்பம் தொடர்பான கூடுதல் செய்திக்கு எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications