மார்ச் 4: 64எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் வரும் மார்ச் 4-ம் தேதி தனது புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5ஜி வசதி, சிறந்த மென்பொருள் மற்றும் அசத்தலான கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முதல் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு தான் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஒஎல்இடி பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்றும், 120Hz refresh rate ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பலவேறு அம்சங்களை கொண்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

மூன்று கேமராக்கள்
ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும் அல்லது 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 125 UltraDart பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
வெளிவந்த தகவலின்படி, ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.


Click it and Unblock the Notifications