Home
News

அடிச்சான் பாரு Realme.. சாதனை விற்பனை.. Flagship கில்லரில் திரும்ப ஒரு 1TB மாடல்.. எந்த போன்? என்ன விலை?

ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship Smartphone) சாதனமான ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க நிறுவனம் இப்போது 1TB பிளாக் மாடலை வெளியிட்டுள்ளது.

ஆம், மக்களே.. ரியல்மி பிராண்டின் ரசிகர்கள் பலர் கேட்டுக்கொண்ட விருப்பத்தின் கீழ், இப்போது நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனத்தை 16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் மாடலை ஸ்டார்ரி நைட் (Starry Night) என்ற பிளாக் நிற விருப்பத்தில் அறிமுகம் செய்துள்ளது.

அடிச்சான் பாரு Realme.. சாதனை விற்பனை.. Flagship கில்லரில் 1TB மாடல்..

200 மில்லியன் யூனிட் ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) சாதனத்தை விற்பனை செய்து சாதனை படைத்த பிறகு, இந்த மகிழ்ச்சியான செய்தியை ரியல்மி நிறுவனம் (Realme) வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இந்த டிசம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு இந்த மாதத்தின் நடுப்பகுதியில் விற்பனைக்கு வந்தது.

ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) ஸ்மார்ட்போனின் ஸ்டார்ரி நைட் பிளாக் நிற சாதனம் 16ஜிபி ரேம் உடன் 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக இன்று முதல் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத்தின் துணை தலைவரான ஷி குய் சேஸ் தெரிவித்துள்ளார். உண்மையை சொல்ல போனால், ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) சாதனத்தின் 1TB மாடலை நிறுவனம் ஏற்கனவே கொண்டுள்ளது.

இது ரெட் ராக் (Red Rock) நிறம் மற்றும் பிரைட் மூன் (Bright Moon) நிறங்களில் மட்டும் முன்பு அறிமுகம் செய்திருந்தது. இவை லெதர் பேக் பேனலுடன் விற்பனைக்கு வெளிவந்தன. ஆனால், நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள Realme GT 5 Pro பிளாக் 1TB மாடல் கிளாஸ் பேனல் உடன் வருகிறது. இதன் ஸ்டார்ரி நைட் பெயர் குறிப்பிடுவது போல குட்டிக்குட்டி நட்சத்திரங்கள் போல் இதன் பேனல் ஜொலிக்கிறது.

அடிச்சான் பாரு Realme.. சாதனை விற்பனை.. Flagship கில்லரில் 1TB மாடல்..

இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை, ஆனால் இதற்கு முன்பு நிறுவனம் அறிமுகம் செய்த 1TB ஸ்டோரேஜ் மாடல் இந்திய மதிப்பில் ரூ.50,000 விலை வரம்பில் வேவையானது என்பது கவனிக்கத்தக்கது.

ரியல்மி ஜிடி 5 ப்ரோ சிறப்பம்சம் (Realme GT 5 Pro Specification):
- 6.78" இன்ச் OLED கர்வுட் டிஸ்பிளே (Display)
- 144Hz ரெஃப்ரஷ் ரேட் (LTPO)
- 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (4500 nits Peak Brightness)
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC)

- 16ஜிபி LPDDDR5x ரேம் (16GB LPDDDR5x RAM)
- 1TB ஸ்டோரேஜ் (1TB UFS 4.0 storage)
- ரியல்மி UI 5.0 உடன் ஆண்ட்ராய்டு 14 (Android 14)
- 50MP Sony LYT-808 பிரைமரி கேமரா + 8MP + 50MP சென்சார்
- 32MPசெல்பி கேமரா (Camera)
- 5400 mAh பேட்டரி (Battery)

- 100W வயர்டு சார்ஜிங் (100W wired charging)
- 50W வயர்லெஸ் சார்ஜிங் (wireless charging)
Realme GT 5 Pro ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களை பேக் செய்து, விற்பனைக்கு வந்த குறைந்த நேரத்தில் அதிக யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 5 Pro Flagship Killer Smartphone Launched With 16GB RAM 1TB Storage In Starry Night Black Variant
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X