உலகின் முதல் மைக்ரோஸ்கோப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்- 512ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரியல்மி ஜிடி 2 தொடர் அறிமுகம்

|

இறுதியாக ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோஸ்கோப் கேமரா கொண்ட உலகின் முதல் சாதனமாக இருக்கிறது.

ரியல்மி ஜிடி 2 சீரிஸ்

ரியல்மி ஜிடி 2 சீரிஸ்

இறுதியாக, ரியல்மி ஜிடி 2 சீரிஸ் நிறுவனத்தின் உள்நாட்டு சந்தையான சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி 2 தொடரில் ரியல்மி ஜிடி 2 மற்றும் ரியல்மி ஜிடி 2 ப்ரோ என இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் ப்ரோ வேரியண்ட் ஆனது ரியல்மி நிறுவனத்தின் மிகவும் ப்ரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது டிசம்பர் 2021-ல் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பேப்பர் டெக் மாஸ்டர் போன்ற புதுமைகளை கொண்டிருக்கிறது.

ரியல்மி ஜிடி 2 சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி 2 சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனானது பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 6.62 இன்ச் இ4 அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்- டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. ஹூட்டின் கீழ், இந்த சாதனம் ஆக்டோ கோர் குவால்கா் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி உடன் இணைந்து 12 ஜிபி ரேம் வசதி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு அணுகலை கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்

ரியல்மி யூஐ 3.0 உடன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் என்எஃப்சி போன்ற இணைப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இமேஜிங் ஆதரவுக்கு என ஓஐஎஸ் உடனான 50 எம்பி முதன்மை கேமரா சென்சார், 119 டிகிரி எஃப்ஓவி உடனான 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை மேக்ரோ லென்ஸ் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது. 65 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுடனான 5000 எம்ஏஎச் பேட்டரி ஸ்மார்ட்போன் வசதியோடு வருகிறது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் டபிள்யூக்யூ எச்டி ப்ளஸ், எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. எச்டிஆர் 10+ ஆதரவு, உச்சநிலை பிரகாசம் 1400 நிட்ஸ், எம்இஎம்சி, பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டால்பி அட்மோஸ் வசதியை கொண்டுள்ளது.

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி

ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஆனது குவால்காம்-ன் சமீபத்திய முதன்மை சிப்செட் வசதியோடு ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த செயலி அட்ரீனோ ஜிபியூ உடன் இணைந்து 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது 512 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு கொண்டிருந்தாலும் இதில் மெமரி விரிவாக்கத்துக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருப்பதாக கூறப்படுகிறது. ஏஐ ஃப்ரேம் ஸ்டெபிலைசேஷன் டெக் 2.0-க்கான ஜிடி மோட் 3.0 பயன்முறை மற்றும் குறைந்த மின் நுகர்வு உள்ளிட்ட அம்சங்களை இந்த சாதனம் கொண்டிருக்கிறது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இமேஜிங் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார், 150-டிகிரி எஃப்ஓவி உடனான 50 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மூன்றாம் நிலை 40 எக்ஸ் மைக்ரோஸ்கோப் லென்ஸ் உள்ளிட்டவை அடங்கும். கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த சாதனம் 4கே வீடியோ ரெக்கார்டிங், நைட் மோட், போர்ட்ரெய்ட் லென்ஸ், டைம் லேப்ஸ் உள்ளிட்டவை அடங்கும். அதேபோல் இந்த சாதனத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியை கொண்டிருக்கிறது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ சாதனத்தின் இணைப்பு அம்சங்களை பொறுத்தவரையில் இந்த சாதனம் 5ஜி, ப்ளூடூத் 5.0, வைஃபை 6, ஜிபிஎஸ், என்எஃப்சி மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்டவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டிருக்கிறது.

ரியல்மி ஜிடி 2, ஜிடி 2 ப்ரோ விலை விவரங்கள்

ரியல்மி ஜிடி 2, ஜிடி 2 ப்ரோ விலை விவரங்கள்

ரியல்மி ஜிடி 2, ஜிடி 2 ப்ரோ விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனானது மூன்று சேமிப்பக விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.30,500 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.32,800 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.36,500 ஆகவும் இருக்கிறது.

முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயார்

முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயார்

அதேபோல் ரியல்மி ஜிடி 2 ப்ரோ நான்கு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.43,400 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.47,000 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.50,400 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.56,400 ஆகவும் இருக்கிறது. இந்த இரண்டு மாடல் போன்களும் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக இருக்கிறது. இந்த சாதனத்தின் சீன விற்பனை ஜனவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme GT 2 Series Launched With Microscope Camera, 12GB RAM, 512GB Memory and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X