அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன்.!
சமீபத்தில் ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அல்லது இறுதியிலோ அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் இ.எம்.இ.ஐ வலைத்தளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி இந்த புதிய சாதனம் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. கண்டிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த
ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மர்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு2400 x 1080 பிக்சல் தீர்மானம், எச்டிஆர் 10+ ஆதரவு, 1300 நிட்ஸ் பிரைட்நஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன். விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கூட கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 2 சாதனமானது 256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்ஃஎப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது.

குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சாதனம் 65 வாட்ஸ் சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது. 36 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது உயர்ரக அம்சங்களுடன் அதற்கு ஏற்ற விலையில் கிடைக்கிறது.
ரியல்மி ஜிடி நியோ 2 ஸமார்ட்போனுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் இனி வரும் ரியல்மி ஜிடி 2 ப்ரோ மாடலும் தனித்துவமான வசதியுடன் வெளிவரும் என்பதால் கண்டிப்பாக அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல் ரியல்மி நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.


Click it and Unblock the Notifications