108 எம்பி கேமரா, 12ஜிபி ரேம் ஆதரவு- ரியல்மி ஜிடி 2 ப்ரோ, ரியல்மி 9 4ஜி இந்தியாவில் அறிமுகம்: ரூ.15,999 முதல்!

|

ரியல்மி ஜிடி 2 ப்ரோ, ரியல்மி 9 4ஜி, ரியல்மி புக் பிரைம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. அதோடு ரியல்மி பட்ஸ் ஏர் 3, ரியல்மி ஸ்மார்ட் டிவி ஸ்டிக் சாதனங்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது பேப்பர் க்ரீன், பேப்பர் வைட் மற்றும் ஸ்டீல் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ

ரியல்மி ஜிடி 2 ப்ரோ

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 7 (இன்று) அறிமுகப்படுத்தப்பட்டது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது எல்டிபிஓ 2.0 ஆதரவோடு சூப்பர் ரியாலிட்டி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் நிறுவனம் ரியல்மி 9 4ஜி சாதனத்தையும் அறிமுகப்படுத்தியது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்

இந்தியாவில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.49,999 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.57,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆனது அறிமுக சலுகையாக ரூ.44,999 ஆக கிடைக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆனது அறிமுக சலுகையாக ரூ.52,999 ஆக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பேப்பர் கிரீன், பேப்பர் ஒயிட் மற்றும் ஸ்டீல் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த சாதனம் ஏப்ரல் 14 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ரியல்மி.காம், பிளிப்கார்ட் மற்றும் சில்லறை கடைகள் மூலமாக விற்பனைக்கு வரும் என நிறுவனம் தெரிவிக்கிறது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,999 ஆக கிடைக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18,999 ஆக கிடைக்கிறது. இந்த ரியல்மி சாதனம் அறிமுக சலுகையாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.15,999 என கிடைக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.16,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மெடியார் பிளாக், ஸ்டார்கேஜ் வைட், சன்பர்ஸ்ட் கோல்ட் வண்ண விருப்பங்களோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ரியல்மி.காம், பிளிப்கார்ட் மற்றும் சில்லறை கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது டூயல் சிம் ஆதரவோடு ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி யுஐ 3.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் 2கே டிஸ்ப்ளே (1,440x3,216 பிக்சல்கள்) தீர்மானத்தோடு எல்டிபிஓ 2.0 அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரேஷ் ரேட் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் டிஸ்ப்ளே பாதுகாப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

65 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜ் வசதி

65 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜ் வசதி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா ஆதரவோடு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை கேமரா, 50 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உடன் வருகிறது. ரியல்மி ஜிடி2 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 65 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜ் வசதியோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ரியல்மி 9 4ஜி சிறப்பம்சங்கள்

ரியல்மி 9 4ஜி சிறப்பம்சங்கள்

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி யூஐ 3.0 ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) தீர்மானம் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை 5 ஜிபி வரை டைனமிக் ரேம் விரிவாக்க வசதியைக் கொண்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 108 எம்பி சாம்சங் ஐசோசெல் எச்எம்6 ஆதரவு, 8 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2 எம்பி கேமரா கேமரா ஆதரவோடு வருகிறது. ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme GT 2 Pro, Realme 9 4G Launched in India With 108Mp Camera, 12GB RAM and More.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X