வரிசையில் வாங்க: ரூ.5,749 முதல் ஸ்மார்ட்போன்! டிவி மற்றும் பல சாதனங்களுக்கு ஆபர் போட்ட Realme.!

|

ரியல்மி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் 'Golden Festival' sale எனும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

பின்பு பிளிப்கார்ட், அமேசான், ரியல்மி.காம் போன்ற தளங்களில் ரியல்மி நிறுவனத்தின் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. அதேபோல் ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு சாதனங்களை வாங்கினால் கூடுதல் தள்ளுபடி சலுகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிறப்பு விற்பனை சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன், டிவி மற்றும் பல சாதனங்களுக்கு ஆபர் போட்ட Realme.!

ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் ரியல்மி narzo 50 5G ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்பட்ட ரியல்மி narzo 50 5G ஸ்மார்ட்போன் தற்போது ரூ.13,999-க்கு வாங்கக் கிடைக்கிறது. அதேபோல் ரியல்மி narzo 50 ப்ரோ 5G ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி narzo 50 4ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு 12,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ரியல்மி narzo 50 4ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.10,999-க்கு வாங்கக் கிடைக்கிறது. அதேபோல் ரியல்மி narzo 50i ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.6,499-விலையில் வாங்கக் கிடைக்கிறது.

ரியல்மி narzo 50i Prime ஸ்மார்ட்போன் முன்பு ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.500 விலை குறைக்கப்பட்டு ரூ.7,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மிகவும் பிரபலமான ரியல்மி சி30 ஸ்மார்ட்போனுக்கு தற்போது ரூ.1250 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரியல்மி சி30 ஸ்மார்ட்போனை இப்போது ரூ.5,749-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரியல்மி 9ஐ 4ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது ரூ.2500 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரியல்மி 9ஐ 4ஜி ஸ்மார்ட்போனை இப்போது ரூ.8,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 32-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிக்கு தற்போது ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரியல்மி 32-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை இப்போது ரூ.11,999-விலையில் வாங்க முடியும். மேலும் 40-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு ரூ.2000 விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

43-இன்ச் ரியல்மி ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவிக்கு ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.22,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 4கே வேரியண்ட் மாடலுக்கு 2000 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில அசத்தலான ரியல்மி ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ரியல்மி இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், டேப்லெட், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Realme Golden Festival Sale: 35 percent discount on smartphones, tablets, smart TVs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X