இது "3.0"- ரியல்மி ரசிகர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்: எப்போது தெரியுமா?

|

ரியல்மி யுடி 3.0 பயன்பாடு ரியல்மி ஜிடி நியோ 2 வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படுகிறது. ஓஎஸ்-க்கு தகுதியான சாதனங்களுக்கு அக்டோபரில் எப்போதாவது கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய பதிப்பானது ஆண்ட்ராய்டு 12-ஐ அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது. ரியல்மி யுஐ ஆண்ட்ராய்டு 10ஐ அடிப்படையாகக் கொண்டது. அதேபோல் யுஐ 2.0 ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரவிருக்கும் யுஐ 3.0 ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஓஎஸ் வெளியீட்டு தேதி அக்டோபரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி யுஐ 3.0

ரியல்மி யுஐ 3.0

ரியல்மி ஜிடி நியோ 2 நிகழ்வில் ரியல்மி யுஐ 3.0 குறித்து ரியல்மி துணை தலைவர் Xu Qi Chase அறிவித்ததாக வெய்போவின் மைடிரைவர்ஸ் அறிக்கை கூறுகிறது. இயக்க முறைமையின் புதிய பதிப்பு அக்டோபரில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அறிமுகத்தின் போது தங்கள் சாதனங்கள் புதுப்பிப்பை பெறும் என கூறப்படுகிறது.

கலர் ஓஎஸ் 12

கலர் ஓஎஸ் 12

ரியல்மி யுஐ 3.0 சாதனத்தின் அம்சங்களை கலர் ஓஎஸ் 12 உடன் பகிர்ந்து கொள்ளும் என வைலாப்-ன் மற்றொரு பதிவு தெரிவிக்கிறது. புதிய ரியல்மி யுஐ 3.0 ஓஎஸ் புதிய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களுடன் புதிய வடிவமைப்பைக் கொண்டு வரும் என கூறப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி சமீபத்தில் ரியல்மி ஜிடி நியோ 2 சாதனத்தை அறிவித்தது. ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஸ்னாப்டிராகன் சிப்செட், 64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,499 (இந்திய மதிப்பில் ரூ.28,500)-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.30,800)-ஆக உள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.34,200)-ஆக உள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 2 சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி நியோ 2 சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் சாம்சங் இ4 டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 + ஆதரவு, 600 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

64எம்பி பிரைமரி சென்சார்

64எம்பி பிரைமரி சென்சார்

ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இந்த ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme Going to Launch UI 3.0 OS in October: Expected Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X