Home
News

அசத்தலான அம்சங்களுடன் விரைவில் புதிய பீச்சர் போன் அறிமுகம் ரியல்மி.!

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் தனித்தவமான அம்சங்களை கொண்டுவருவதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மியின் துணை பிராண்டு டிசோ இந்தியாவில் புதிய பீச்சர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

 சாதனத்தின் டீசர்

அண்மையில் இந்த புதிய சாதனத்தின் டீசர் வெளியானது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த பீச்சர் போன் மாடல் வெளிவரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பீச்சர் போன் ஸ்டார் 5

அதேபோல் இந்த பீச்சர் போன் ஸ்டார் 5 என்று அழைக்கப்படும். பின்பு இந்த சாதனத்தின் ஒரு சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் ஸ்டார் சீரிசில் குறைந்த விலை மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று
டிசோ சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் டிசோ ஸ்டார் 5 சாதனம் ஆனது டூயல் சிம் வசதி, 2ஜி கனெக்டிவிட்டி, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 1830 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ரியல்மி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் மாடலில்

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் UNISOC T610 பிராசஸர் வசதி உடன் MaliG52 GPU ஆதரவும் உள்ளது.எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது, ஆனால் விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ன் ஆனது 3ஜிபி/4ஜிபி

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி tertiary mono லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 5000 எம்ஏஎச் பேட்ட

ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் எனபல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் ப்ளூ மற்றும் பிளாக் நிறங்களில்இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வைபை, ப்ளூடூத், 3.5mm

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், யுஎஸ்பி டைப் சி போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தரியல்மி C21Y ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.11,300-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Dizo teases feature phone Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X