Diwali Sale 2024: டிவி வாங்கனுமா? ரூ.19000-க்கு வந்த 43 இன்ச் டிவிகள்.. Realme டிவி ஆஃபர்.. எந்தெந்த மாடல்கள்?
இந்த தீபாவளி பண்டிகையில் டிவி வாங்க முடிவெடுத்த கஸ்டமர்களுக்கு ரியல்மி இந்தியா நிறுவனத்தின் ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனை (Realme Festive Days Sale) பக்காவாக இருக்கும். இந்த டிவி விற்பனையில் ரியல்மி டெக்லைஃப் சினிசோனிக் டிவிகள் (Realme TechLife Cinesonic TVs) மற்றும் ரியல்மி டெக்லைஃப் சினிசோனிக் கியூ டிவிகள் (Realme TechLife Cinesonic Q TVs) மாடல்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிவிகளின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த டிவிகளில் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்கள் அல்ட்ராஎச்டி (UHD) மற்றும் கியூஎல்இடி (QLED) வெர்ஷன்களாக ஆர்டருக்கு கிடைக்கின்றன. ரூ.20,000 பட்ஜெட்டைவிட மாலிவான விலைக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த ரியல்மி டிவிகளை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையிலும் (Big Billion Days Sale) ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ரியல்மி டெக்லைஃப் சினிசோனிக் டிவி ஆஃபர் (Realme TechLife Cinesonic TV Offer): இந்த டிவிகள் அல்ட்ராஎச்டி டிஸ்பிளே மாடல்களாகும். இதில் 43 இன்ச் அல்ட்ராஎச்டி மாடலின் விலை ரூ.20,499ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதை சென்ட்ரல் பேங்க் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.18,999 விலையில் வாங்கி கொள்ளலாம்.
50 இன்ச் அல்ட்ரா எச்டி மாடலின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கலாம். சென்ட்ரல் பேங்க் கார்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதேபோல 55 இன்ச் அல்ட்ரா எச்டி மாடலின் விலை ரூ.30,999ஆக இருக்கிறது. இப்போது, சென்ட்ரல் பேங்க் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, ரூ.28,999 பட்ஜெட்டில் இந்த டெக்லைஃப் சினிசோனிக் டிவியை வாங்கி கொள்ளலாம். மேலும், 65 இன்ச் அல்ட்ரா எச்டி மாடலின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.36,999 பட்ஜெட்டில் இந்த டிவியை வாங்கலாம். இதற்கும் சென்ட்ரல் பேங்க் கார்டு பயன்படுத்த வேண்டும்.
ரியல்மி டெக்லைஃப் சினிசோனிக் கியூ டிவி ஆஃபர் (Realme TechLife Cinesonic Q TV Offer): இந்த டிவிகள் கியூஎல்இடி டிஸ்பிளே மாடல்களாகும். 43 இன்ச் கியூஎல்இடி மாடலின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது, சென்ட்ரல் பேங்க் கார்டுக்கு ரூ.1500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,499 பட்ஜெட்டில் இந்த மாடலை வாங்கி கொள்ளலாம்.
அதேபோல 50 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே மாடலின் விலை ரூ.28,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2000 சென்ட்ரல் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.26,999 பட்ஜெட்டில் இந்த சினிசோனிக் கியூ டிவியை வாங்கி கொள்ளலாம். 55 இன்ச் கியூஎல்இடி மாடலின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஆகவே, ரூ.29,999 பட்ஜெட்டில் இந்த டிவிகளை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் சென்ட்ரல் பேங்க் கார்டுக்கு கிடைக்கிறது. இறுதியாக ரூ.41,999 விலை கொண்ட 65 இன்ச் கியூஎல்இடி மாடலுக்கு ரூ.3000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. சென்ட்ரல் பேங்க் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.38,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.
இந்த ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையானது, வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஆகவே, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் ரியல்மி தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். தீபாவளிக்கு டிஸ்கவுண்ட்டில் டிவி வாங்க திட்டமிட்டுருந்தால், இந்த ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications