Home
News

5 நிமிடத்தில் 100% சார்ஜ்.. உண்மையான 300W பாஸ்ட் சார்ஜிங் இதான்.. Realme ஆட்டம் ஆரம்பம்.. வெயிட்டிங் ஓவர்..

ரியல்மி (Realme) நிறுவனம் வரும் ஆகஸ்ட் 14, 2024 ஆம் தேதி ஒரு பிரமாண்டமான நிகழ்வை சீனாவில் நடத்த திட்டமிட்டுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் இந்த ஈவெண்ட்டில், நிறுவனம் அதன் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் உலக ஸ்மார்ட்போன் பயனர்களை வியப்படைய செய்யும் வகையில், ரியல்மி நிறுவனம் 300W சூப்பர் ஃபாஸ்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுப்பதை அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைக்காத சூப்பர் வேகத்தில் இந்த 300W பாஸ்ட் சார்ஜிங் வேலை செய்வதாக லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ரியல்மி நிறுவனம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்வில் 300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (300W Fast Charging Technology) அறிமுகம் செய்யவிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக, இணையத்தில் ஒரு புதிய டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஒரு ஸ்மார்ட்போனில் சார்ஜர் சொருகப்பட்டவுடன், 0% முதல் 15% சார்ஜ் (Charge) வெறும் 32 வினாடிகளில் (Seconds) நிரப்படுவதை வீடியோ தெளிவாக காண்பித்துள்ளது.

5 நிமிடத்தில் 100% சார்ஜ்.. உண்மையான 300W பாஸ்ட் சார்ஜிங் இதான்..

ரியல்மி 300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் (Realme 300W Fast Charging Technology):

அதேபோல், அடுத்த 3 வினாடிகளில் அந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி சார்ஜ் 17% வரை வேகமாக நிரப்படுவதை வீடியோ காண்பிக்கிறது. அத்துடன் ரியல்மி இன் சார்ஜிங் வீடியோ நிறைவு பெறுகிறது. இது என்ன பவர் சார்ஜர், எந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது என்பது போன்ற எந்த தகவலையும் அந்த வீடியோ காண்பிக்கவில்லை. இது வரவிருக்கும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஒரு டெமோ வீடியோவாக (Realme fast charging demo) வெளியிடப்பட்டுள்ளது.

300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனம் ரியல்மி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சியோமியின் (Xiaomi) இன் துணை பிராண்ட் ஆன ரெட்மி (Redmi) உலகத்தின் முதல் 300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உலகிற்கு டெமோ செய்து காண்பித்தது. ஆனால், அந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களை ரெட்மி சந்தைப்படுத்தவில்லை.

இப்போது வரை, ரெட்மி நிறுவனம் அதிகபட்சமாக 120W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (120W fast charging technology) மட்டுமே அதன் சந்தைப்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நிறுவனம் டெமோ செய்து காண்பித்த 300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வெறும் 5 நிமிடங்களில் 0% முதல் 100% வரையிலான பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து முடித்து என்பது குறிப்பிடத்தக்கது.

0% முதல் 100% வரையிலான சார்ஜ் வெறும் 5 நிமிடங்களில்:

இந்த 300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை நிறுவனம் ரெட்மி நோட் 12 (Redmi Note 12) ஸ்மார்ட்போனின் 4100mAh பேட்டரியை சார்ஜ் செய்து டெமோ செய்து காண்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ரியல்மி நிறுவனம் அதன் முதல் 300W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் மூலம் ஸ்மார்ட்போன் சநதைக்குள் 300W பாஸ்ட் சார்ஜிங்கை சந்தைப்படுத்தும் முதல் நிறுவனமாக ரியல்மி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு லீக் தகவல், ரியல்மி நிறுவனம் 300W வேகம் கொண்ட பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கும் மேலான வேகம் கொண்ட சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. காரணம், இறுதியாக 240W சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிட்டது. இதனால், 320W அல்லது 310W போன்ற பாஸ்ட் சார்ஜிங்கை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Demo Video Shows New Realme 300W Fast Charging Technology That Charges 0-17 Percentage In 35 Seconds
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X