அடடா ஆகஸ்ட் 18 உறுதி: அழகான லுக், அற்புத அம்சத்தோடு ரியல்மி புக் லேப்டாப்- விலை குறைவுதான்!
ரியல்மி புக் லேப்டாப் ஆகஸ்ட் 18 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ரியல்ம் பேட் அதனுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரியல்மி புக் 11-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5-1135ஜி7 செயலி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இது ப்ளூ கலர் வேரியண்ட்டில் வரும். ரியல்மி நிறுவனம் இறுதியாக தனது லேப்டாப் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. ரியல்மி புக் லேப்டாப் ஆகஸ்ட் 18 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரியல்மி புக் லேப்டாப்
ரியல்மி புக் லேப்டாப் வெளியீட்டு தேதி அன்று ரியல்மி நிறுவனம் இரவு 7:30 மணிக்கு வெளியீட்டு நிகழ்வை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் ரியல்மி அதே தினத்தில் ரியல்மி பேண்ட் அறிமுகப்படுத்தப்படுமா என்பது நிறுவனம் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

11-வது ஜெனரேஷன் இன்டெல் கோர்
இதற்கிடையில் டிப்ஸ்டர் டிஜிட்டல்சாட் ஸ்டேஷன் தகவலின்படி, ரியல்மி புக் 11-வது ஜெனரேஷன் இன்டெல் கோர் ஐ5-1135ஜி7 செயலி மூலம் இயக்கப்படும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ரியல் ரெட் மற்றும் ரியல் ஆப்ரிகாட் போன்ற பிற வண்ணங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ் 10 ஹோம்
நிறுவனத்தின் PR manager பிரதீக் சவுத்ரி, ரியல்மி புக் 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 செயலி மற்றும் விண்டோஸ் 10 ஹோம் ஆகியவற்றை கொண்டிருக்கும் எனவும் பின் விண்டோஸ் 11-க்கு மேம்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், விலை, வடிவமைப்பு
ரியல்மி புக் சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், விலை, வடிவமைப்பு குறித்த தகவல் கடந்த மாதம் கசிந்தன. மடிக்கணினியின் வடிவமைப்பானது ஒரு பெரிய டிராக்பேட் உடன் பிரஷ் செய்யப்பட்ட அலுமினிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டுபுறமும் கருப்பு நிற விசைகள் மற்றும் போர்ட்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆப்பிள் மேக்புக் போன்ற வடிவமைப்பு
ரியல்மி புக் குறித்து முன்னதாகவே சில படங்கள் கசிந்தது. லேப்டாப்பில் சில்வர் பூச்சு மற்றும் அலுமனிய உருவகத்துடன் வரும் என கூறப்படுகிறது. இது ஆப்பிள் மேக்புக் போன்ற வடிவமைப்பு ஆகும். மடிக்கணினியில் அலுமினிய கட்டமைப்பை கொண்ட மூடியில் ரியல்மி பிராண்ட் பெயர் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது 3:2 என்ற விகித காட்சியுடன் மெலிதான பெசல்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

14 இன்ச் முழு எல்இடி பேனல்
இந்த லேப்டாப் ஆனது 14 இன்ச் முழு எல்இடி பேனலுடன் வரும் எனவும் இதை எதிர்ப்பு கண் கூசு பூச்சுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இன்டெல்-ன் 11-வது தலைமுறை செயலிகளை தேர்வு செய்ததன்படி ஐ3 மற்றும் ஐ5 விருப்பங்களுடன் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. பல விருப்ப ரேம் மற்றும் சேமிப்பு விருப்பங்களில் வரலாம்.

இந்தியாவில் சாதனத்தின் விலை
பவர் பட்டனானது கைரேகைசென்சார் ஆகவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இது யூஎஸ்ஏ போர்ட் மற்றும் இடதுபுறத்தில் 2 xயூஎஸ்பி-சி போர்ட்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மாடல்களுக்கான விலை ரூ.40,000-த்துக்கு கீழ் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்துக்கு முன்பாக சாதனங்களின் சில அதிகாரப்பூர்வ அம்சங்களும் புகைப்படத்தை வெளிப்படுத்தும் டீசரும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications