பட்ஜெட் விலை.. 108MP கேமரா.. 8GB ரேம்.. 2TB மெமரி.. 5000mah பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
ரியல்மி (Realme) நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதன் ரியல்மி C67 5ஜி (Realme C67 5G) மாடலை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து நிறுவனம் ரியல்மி C67 4ஜி (Realme C67 4G) மாடலை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி நிறுவனம், இன்று இந்தோனேசியாவில் அதன் புதிய ரியல்மி C67 4ஜி (Realme C67 4G) மாடல் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது விரைவில் மற்ற ஸ்மார்ட்போன் சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ரியல்மி C67 4ஜி சாதனம் 108MP கேமரா அம்சத்துடன் வெளிவந்து மக்களை அசத்தியுள்ளது.

ரியல்மி C67 4ஜி (Realme C67 4G):
இதன் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன என்று விபரங்கள் இதோ. புதிய ரியல்மி C67 4ஜி (Realme C67 4G) ஸ்மார்ட்போன் சாதனம் 6.72" இன்ச் அளவு கொண்ட IPS LCD டிஸ்பிளேவை FHD+ உடன் கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் அம்சத்துடன் இது இயங்குகிறது. இந்த டிஸ்பிளேவின் மையத்தில் பஞ்ச் ஹோல் கட்டவுட் உடன் 8MP செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி C67 4ஜி (Realme C67 4G) ஸ்மார்ட்போன் சாதனத்தின் பின்புறத்தில், 108MP கொண்ட சாம்சங் ISOCELL HM6 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது 3X சென்சார் ஜூமிங் அம்சத்துடன் வருகிறது. இத்துடன் சேர்த்து, இந்த போனில் 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் ரியல்மி யுஐ 4.0 உடன் (Realme UI 4.0) இயங்குகிறது.
இந்த ரியல்மி C67 4ஜி (Realme C67 4G) ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 685 உடன் வருகிறது. இது அட்ரினோ 610 (Adreno 610) ஜிபியு (GPU) உடன் வருகிறது. இதன் ஸ்டோரேஜ் (Storage) பற்றி பேசுகையில், இது 8ஜிபி ரேம் (8GB RAM) உடன் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் (128GB / 256GB memory) கொண்ட 2 வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2TB மெமரி உடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் (2TB memory budget smartphone):
இதில் 2TB மெமரி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு ஸ்லாட் (card slot) ஆதரவு மூலம் கிடைக்கிறது. இந்த ரியல்மி C67 4ஜி (Realme C67 4G) ஸ்மார்ட்போன் சாதனம் 5000mah பேட்டரி (Battery) உடன் வருகிறது. இது 33W சார்ஜிங் (Charging) ஆதரவுடன் வருகிறது. இது டூயல் ஸ்பீக்கர் (dual speaker) ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வைஃபை (Wi-Fi 802.11 a/b/g/n/ac) உடன் வருகிறது. இது டூயல் பேண்ட் (dual-band) இல் இயங்குகிறது.
இது ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) அம்சத்துடன் வருகிறது. இதில் A2DP, LE Positioning,ஜிபிஎஸ் (GPS), கலிலியோ (GALILEO), க்ளோனஸ் (GLONASS), QZSS, BDS போன்ற ஆதரவுகளை இதில் உள்ளது. இது NFC, உடன் வருகிறது, இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இந்தோனேஷியா சந்தையில் IDR 2,999,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.16,000 என்ற விலையை பெறுகிறது.
பட்ஜெட் விலையில் 108MP கேமரா.. அருமையான ரேம்.. போதுமான ஸ்டோரேஜ்.. பெரிய பேட்டரி என்று பல அம்சங்களை பேக் செய்துள்ள இந்த ரியல்மி C67 4ஜி (Realme C67 4G) ஸ்மார்ட்போனை நீங்கள் பொறுமையாக வெயிட் செய்துகூட வாங்கலாம். இது இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.


Click it and Unblock the Notifications








