iPhone 14 Pro போன்ற டைனமிக் ஐலேண்ட் டிஸ்பிளேவுடன் வருகிறதா Realme C55! என்னப்பா சொல்லுறீங்க?
ஸ்மார்ட்போன் பிராண்ட் ரியல்மி புதிய சி-சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Realme C55 என அழைக்கப்படும் இந்த சாதனம் இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆப்பிளின் 14 ப்ரோ சாதனத்தில் உள்ள டைனமிக் ஐலேண்ட் போன்ற மினி கேப்சூல் டிஸ்பிளே உள்ளது.
Realme C55 மொபைல் போனின் மையத்தில் வழக்கமான பஞ்ச்-ஹோல் கேமரா கட்அவுட் உள்ளது. ஆனால், இது சார்ஜிங், டேட்டா பயன்பாடு, குறைந்த பேட்டரி மற்றும் பிற தகவல்கள் போன்ற நோட்டிபிகேஷன் தகவல்களைக் காட்ட இது விரிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பார்ப்பதற்கு அப்படியே ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோவின் டைனமிக் ஐலேண்ட் டிஸ்பிளே போல பிரதிபலிக்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது இந்தியா உட்பட பிற நாடுகளில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்தோனேஷியா அறிமுகத்தை தொடர்ந்து இது விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் சிறப்பம்சம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Realme C55 சிறப்பம்சம்
Realme C55 ஸ்மார்ட்போனில் 6.72' இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 90Hz ரெப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த Realme C55 சாதனம் MediaTek Helio G88 சிப்செட் உடன் Mali-G52 2EEMC2 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 8ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 256ஜிபி வரை கொண்ட இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கு இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உடன் வருகிறது.

Realme C55 ஆனது ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸை அடிப்படையாகக் கொண்ட Realme UI தனிப்பயன் ஸ்கின் உடன் இயங்குகிறது. இந்த புதிய Realme C55 ஸ்மார்ட்போன் சாதனம் 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வழங்குகிறது. கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இந்த Realme C55 ஸ்மார்ட்போன் ஆனது செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக முன்பக்கத்தில் 8MP சென்சாரை கொண்டுள்ளது.
மறுபுறம், அதாவது Realme C55 போனின் பின்புறத்தில், இது 2MP செகண்டரி சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் உடன் இணைக்கப்பட்ட 64MP பிரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவற்றை இந்த Realme C55 கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Realme C55 விலை என்ன?
Realme C55 இரண்டு ரேம் மாடல்களில் வழங்கப்படுகிறது. இது 128ஜிபி மற்றும் 256ஜிபி கொண்ட 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடைய மாடல்களை கொண்டுள்ளது. இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை 2,499,000 ஆகும். இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.13,300 ஆகும். அதேபோல், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் Rp 2,999,000 ஆகும். இது தோராயமாக ரூ.16,000 விலையில் வருகிறது.
ரெய்னி நைட் மற்றும் சன் ஷவர் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது. இது இந்தோனேசியாவில் மார்ச் 8 ஆம் தேதி விற்பனைக்கு வரும். இந்திய அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








