Flipkart ஸ்பெஷல் சேல்: 108MP கேமரா.. 2TB ஸ்டோரேஜ்.. Realme C53 போன் வெறும் ரூ.9999 தானா? எப்போ வாங்கலாம்?
ரியல்மி (Realme) நிறுவனம், இந்தியாவில் அதனுடைய சமீபத்திய பட்ஜெட் பிரெண்ட்லி ஸ்மார்ட்போன் மாடலான புதிய ரியல்மி சி53 (Realme C53) சாதனத்தை அறிமுகம் செய்தது. இதன் சிறப்பு விற்பனை இன்று துவங்குகிறது. இதன் மூலம் இதன் விலை மலிவாய் மாறியுள்ளது.
இந்த சிறப்பு விற்பனையில் Realme C53 ஸ்மார்ட்போனை மிகவும் மலிவு விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதனால், புதிய போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வாடிக்கையாளர்கள் இந்த அற்புதமான வாய்ப்பை நழுவவிடாதீர்கள். சரி, இப்போது எப்படி இந்த புதிய Realme C53 ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுக சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் வாங்குவது என்று பார்க்கலாமா?

realme C53 ஸ்மார்ட்போன் சாதனம் இன்று பிளிப்கார்ட் (Flipkart) தளம் வழியாக விற்பனைக்கு வருகிறது. இது ஒரு சிறப்பு விற்பனையாகும். இந்த சிறப்பு விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் துவங்குகிறது. இதன் வழி விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள், ரியல்மி சி 53 போனை ஸ்பெஷல் சலுகையுடன் வாங்கலாம்.
இந்த புதிய Realme C53 சாதனத்தின் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இப்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த சாதனம் ரூ. 10,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டின் ஸ்பெஷல் சேல்ஸ் (Flipkart Special Sales) துவங்கும் போது, இந்த சாதனத்தின் மீது ரூ. 1,000 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்படும் என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
இதன் மூலம் விற்பனை துவங்கியதும் realme C53 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,999 ஆக குறையும். இது தவிர இந்த ஸ்மார்ட்போன் மீது இன்னும் ஏராளமான வங்கி சலுகை மற்றும் கேஷ் பேக் சலுகை மற்றும் கூப்பன் நன்மை என்று பல எக்ஸ்ட்ரா நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. HDFC, ICICI மற்றும் SBI வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 தள்ளுபடி.

Realme C53 சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.74' இன்ச் கொண்ட (1600 x 720 பிக்சல்கள்) FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் உடன் 64ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக இது 2TB வரை கூடுதல் ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது.
இது 108MP கொண்ட அல்ட்ரா க்ளியர் ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது. 8MP செல்பி கேமராவுடன் வருகிறது. வெறும் ரூ.9,999 விலையில் இத்தகைய ஸ்டோரேஜ் மற்றும் 108MP கேமரா அம்சத்தை எந்த போனும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Realme C53 ஸ்மார்ட்போன் 18W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mah பேட்டரியை கொண்டுள்ளது.
பெஸ்டான அம்சங்களுடன், தரமான குவாலிட்டி உடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை 108MP கேமரா மற்றும் 2TB வரையிலான ஸ்டோரேஜ் உடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், நீங்கள் கண்களை மூடிக்கொண்டு வாங்க வேண்டிய ஒரே சாதனமாக இந்த புதிய Realme C53 திகழ்கிறது. இன்று 12 மணிக்கு துவங்கும் சிறப்பு விற்பனையை மிஸ் செய்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








