Home
News

ரூ.10,000 விலை போனில் 108MP கேமராவா? பட்டையை கிளப்பும் ஸ்பெக்ஸ் உடன் புது Realme போன்!

ரியல்மி (Realme) நிறுவனம் இந்தியாவில் புதிதாக ரியல்மி சி 53 (Realme C53) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் மலிவு விலையில் 108MP கேமராவுடன் வெளிவரவுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Realme C53 இந்தியாவில் ஜூலை 19 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும். நினைவுகூர, இந்த சாதனம் மே மாதம் மலேசியாவில் Realme ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. Realme C53 போனின் முக்கிய அம்சங்களாக இதன் HD+ தீர்மானம் கொண்ட 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 6.74' இன்ச் டிஸ்ப்ளே கூறப்படுகிறது. இந்த டிஸ்பிளே வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது.

ரூ.10,000 விலை போனில் 108MP கேமராவா? பட்டையை கிளப்பும் Realme போன்!

இந்த புதிய ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் சாதனம் 6ஜிபி வரை ரேம் கொண்ட சாதனமாக வெளிவரும். இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 128ஜிபி வரை கொண்டிருக்கும். இந்த சாதனம் டூயல் கேமரா அமைப்பு மற்றும் 8MP செல்ஃபி கேமராவை கொண்டிருக்கும். இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட 5,000mAh பேட்டரியை பேக் செய்யும்.

இந்தியாவில் ஜூலை 19 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் Realme C53, கேமரா பிரிவில் சில மாற்றங்களைக் காணும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, உலகளாவிய மாடலின் அதே விவரக்குறிப்புகளை நிறுவனம் அப்படியே இந்த Realme C53 ஸ்மார்ட்போனில் வழங்கும் என்று கூறப்படுகிறது.

Realme உறுதிப்படுத்தியபடி, Realme C53 ஸ்மார்ட்போனின் இந்தியா வேரியண்ட் மாடல் கட்டாயம் 108MP பிரைமரி கேமராவை கொண்டிருக்கும். உலகளாவிய Realme C53 மாடல் 50MP பிரைமரி கேமரா மற்றும் 2MP போர்ட்ரெய்ட் லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பு நோக்கங்களுக்காக, Realme C53 சாதனம் 8MP கேமராவை கொண்டுள்ளது.

ரூ.10,000 விலை போனில் 108MP கேமராவா? பட்டையை கிளப்பும் Realme போன்!

108MP கேமராவை தொடர்ந்து, போனின் மற்ற கேமராக்கள் அப்படியே இந்திய மாடலிலும் பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது. Realme C53 குளோபல் மாடல், Mali-G57 GPU உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் Unisoc T612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது.

இந்த டிஸ்பிளே 560 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் விகிதம் உடன் வருகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை கொண்ட ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது. இது microSD கார்டு மூலம் 1TB வரை கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தை வழங்குகிறது.

இது 5,000mAh பேட்டரி உடன் 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Realme C53 வழங்கும் மற்ற முக்கிய அம்சங்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், 4G, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth v5.0 மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

Realme C53 உலகளாவிய மாறுபாடு சாம்பியன் கோல்ட் மற்றும் மைட்டி பிளாக் நிறத்தில் வருகிறது. மலேசியாவில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்ட போது, இதன் விலை இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 9,800 என்ற விலையில் வருகிறது. இந்தியாவில் இந்த சாதனம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரையிலான விலை வரம்பில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C53 India Variant Confirmed With 108MP Camera Launching July 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X