மார்ச் 7 அறிமுகம்: 4 ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி சி35!
ரியல்மி சி35 சாதனம் இந்தியாவில் மார்ச் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரியல்மி சி35 சாதனத்தை மார்ச் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப் போவதாக ரியல்மி தனது இணையதளத்தின் மூலமாக அறிவித்துள்ளது. சி சீரிஸ் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் தாய்லாந்தில் யூனிசாக் செயலியுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ரியல்மி இந்தியா இணையதளத்தில் ஸ்மார்ட்போனின் சில முக்கிய சிறப்பம்சங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ரியல்மி சி35 ஸ்மார்ட்போன்
ரியல்மி சி35 ஸ்மார்ட்போனானது 2408 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வரும் என்பதை பக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனில் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் என கூறப்படுகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்
ரியல்மி சி35 ஸ்மார்ட்போனானது தாய்லாந்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை தோராயமாக ரூ.13,320 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.14,470 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஒளிரும் பிளாக் மற்றும் ஒளிரும் பச்சை வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது. ரியல்மி இந்தியாவில் சி35 இதேபோல் விலை நிர்ணயம் செய்யப்படுமா என்ற தகவல் தெளிவாக தெரியவில்லை.

ரியல்மி சி35 விவரக்குறிப்புகள்
ரியல்மி சி35 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது யூனிசோக் டி616 எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. ரியல்மி சி 35 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 256 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கம் செய்ய முடியும். ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதில் மூன்று கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் விஜிஏ பிளாக் அண்ட் வைட் போர்ட்ரெய்ட் சென்சார் ஆகியவை உடன் வருகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. ரியல்மி யூஐ ஆர் எடிஷன் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. ரியல்மி சி35 ஸ்மார்ட்போனானது மார்ச் 7 அன்று அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் தெரியவில்லை.

64-மெகாபிக்சல் மெயின் சென்சார்
ரியல்மி நிறுவனம் புதிதாக Realme V25 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இன்று (வியாழக்கிழமை) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி இன் V சீரிஸ் சமீபத்திய மாடல் 120Hz புதுப்பிப்பு வீகித டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி வி25 (Realme V25) ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமராக்கள் 64-மெகாபிக்சல் மெயின் சென்சார் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது மற்றும் இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

மூன்று வண்ண விருப்பங்கள்
Realme V25 ஸ்மார்ட்போன் ஒரே ஒரு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பக ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த மாறுபாட்டின் விலை CNY படி 1,999 என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 23,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பர்ப்பிள் எம்எஸ்ஐ, வீனஸ் மற்றும் ஃபிர்மானண்ட் பிளாக் வண்ண விருப்பங்களில் இந்த போன் வருகிறது. இது மார்ச் 4 முதல் Realme இன் சொந்தச் சந்தையில் வாங்குவதற்குக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications