ஒரு வேகத்துல "பழைய" Realme C35-ஐ வாங்கிடாதீங்க! அதற்கு பதில் "இதை" வாங்குங்க!

|

"என்னப்பா இது? கடந்த மார்ச் 2022-இல் அறிமுகமான ஒரு புதிய ஸ்மார்ட்போனை, மூன்று மாதங்களுக்கு முன் அறிமுகமான ஒரு லேட்டஸ்ட் மாடலை, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் பழைய மாடல் என்று சொல்றீயேப்பா!" என்று சிலர் கடுப்பாகலாம்.

குறிப்பாக அறிமுகமான வேகத்திலேயே Realme C35 ஸ்மார்ட்போனை வாங்கியவர்கள்!

ஆனால் "டெக்னிக்கல் ஆக" ஒரு ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகமாகி விட்டால், அதற்கு முன்னதாக வெளியான வேரியண்ட்-ஐ "பழையது" என்றுதானே குறிப்பிட முடியும்!

"பழையது" என்றால்.. 4ஜிபி ரேம் வேரியண்ட்!

நினைவூட்டும் வண்ணம், கடந்த மார்ச் மாதம் ரியல்மி நிறுவனம் ஒரு புதிய பட்ஜெட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அது Realme C35 ஆகும்.

அறிமுகமான நேரத்தில் அது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வாங்க கிடைத்தது. இப்போது அதே ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை என்ன?

6ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை என்ன?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Realme நேற்று (அதாவது ஜூலை.7 ஆம் தேதி) ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் 6GB+128GB வேரியண்ட்டை அறிமுகம் செய்தது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய 6GB வேரியண்ட் இரண்டு வண்ணங்களின் கீழ் வாங்க கிடைக்கும். அது Glowing Black மற்றும் Glowing Green ஆகும். இதன் விலை ரூ.15,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 10 வரை மட்டுமே; இவ்ளோ கம்மி விலைக்கு இந்த 5 போன்களும் இனி கிடைக்காது!ஜூலை 10 வரை மட்டுமே; இவ்ளோ கம்மி விலைக்கு இந்த 5 போன்களும் இனி கிடைக்காது!

எப்போது முதல் வாங்க கிடைக்கும்?

எப்போது முதல் வாங்க கிடைக்கும்?

இன்று முதல்! அதாவது ஜூலை 8 ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் வேரியண்ட் விற்பனைக்கு வரும்.

இது ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் மற்றும் மெயின்லைன் சேனல்களின் வழியாக வாங்க கிடைக்கும்.

கேமரா டிப்பார்ட்மெண்டில் கலக்கும் ரியல்மி சி35!

கேமரா டிப்பார்ட்மெண்டில் கலக்கும் ரியல்மி சி35!

ரியல்மி C35 ஆனது 50MP AI ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது. இது எடுக்கப்படும் புகைப்படத்தில் நல்ல டீடெயில்-களை வழங்குவதை உறுதி செய்யும் f/1.8 Aperture-ஐயும் பேக் செய்கிறது.

குறிப்பிட்ட லென்ஸ் ஆனது போதுமான வெளிச்சத்தை உறுதிசெய்து நீங்கள் எடுக்கும் புகைப்படங்களின் 'தெளிவு' மற்றும் 'பிரகாசத்தை' மேம்படுத்துகிறது.

எப்படி பார்த்தாலும் இந்த பட்ஜெட்டின் கீழ் கிடைக்கும் "பெஸ்ட் கேமரா போன்"களில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமே வேண்டாம்!

Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?

மற்ற கேமராக்கள் எல்லாம் எப்படி?

மற்ற கேமராக்கள் எல்லாம் எப்படி?

ரியல்மி நிறுவனம் ஆனது "இதன் மேக்ரோ லென்ஸ், சூப்பர் க்ளோஸ் ஃபோகஸின் கீழ் சிறந்த மேக்ரோ புகைப்படங்களை உறுதி செய்கிறது. அதே போல் இதன் B&W லென்ஸ், ஆக்கப்பூர்வமான போர்ட்ரெய்ட்காளை உருவாக்கும்" என்று கூறினாலும் கூட, மற்ற எல்லா போன்களிலும் இருப்பதை போலவே, இந்த இரண்டு கேமரா சென்சார்களும் - "சும்மா ஒரு பேச்சுக்கு தான் இருக்கு!" என்பதே உண்மை!

முன்பக்கத்தை பொறுத்தவரை, 8MP செல்பீ கேமரா உள்ளது.

டிசைன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் எல்லாம் எப்படி?

டிசைன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் எல்லாம் எப்படி?

189 கிராம் எடை கொண்ட ரியல்மி சி35 ஆனது இந்த விலை பிரிவில் மிகவும் இலகுவான மற்றும் மெல்லிய ஸ்மார்ட்போன் ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரை, இது Unisoc T616 கொண்டு இயக்கப்படுகிறது. இது ஒரு ஆக்டா-கோர் 12nm ப்ராசஸர் ஆகும். ஒட்டுமொத்தமாக, இதே போன்ற விலையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களை விட Realme C35 ஒரு படி மேல் என்றே கூறலாம்.

iPhone-களுக்கான Lockdown-ஐ அறிவித்த Apple; அட இது எப்போ?iPhone-களுக்கான Lockdown-ஐ அறிவித்த Apple; அட இது எப்போ?

டிஸ்பிளே, பேட்டரி எல்லாம் எப்படி?

டிஸ்பிளே, பேட்டரி எல்லாம் எப்படி?

ரியல்மி சி சீரீஸின் கீழ் FHD 6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். மேலும் டைனமிக் ரேம் எக்ஸ்பான்ஷன்(டிஆர்இ) தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய முதல் சி சீரிஸ் ஸ்மார்ட்போனும் இதுவே ஆகும்.

கடைசியாக, இது 18W டைப்-சி க்விக் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியையும் பேக் செய்கிறது.

Photo Courtesy: Realme India

Best Mobiles in India

English summary
Realme C35 6GB RAM Variant Launched in India Flipkart Sale Starts From Today July 8 Check Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X