ரூ.8,500 மட்டுமே: டிரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமான பக்கா ரியல்மி சி31 ஸ்மார்ட்போன்!
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது இந்தோனேசியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் வரும் நாட்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது யூனிசோக் டி612 எஸ்ஓசி வசதி, 13 எம்பி டிரிபிள் கேமரா அம்சத்தோடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி31 ஸ்மார்ட்போன்
ரியல்மி சி31 இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. ரியல்மி நிறுவனம் ரியல்மி சி31 சாதனத்தை புதிய சி தொடரின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம் உடனான யூனிசோக் டி612 எஸ்ஓசி அம்சத்தோடு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு மற்றும் 13 எம்பி பின்புற கேமரா அம்சத்தோடு வருகிறது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.8,500 ஆக இருக்கிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.8,700 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது லைட் சில்வர் மற்றும் டார்க் க்ரீன் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, இந்த சாதனம் இந்தியாவில் மார்ச் 31 அன்று அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ரியல்மி சி31 சிறப்பம்சங்கள்
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் எச்டி ப்ளஸ் 720×1600 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. ரியல்மி சி31 சாதனமானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. 400 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையுடன் 88.7% ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ விகித்தை இந்த சாதனம் கொண்டிருக்கிறது. ரியல்மி சி31 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் யூனிசோக் டி612 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

13 எம்பி பிரதான பின்புற கேமரா
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனில் சதுர வடிவில் டிரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரதான பின்புற கேமரா மற்றும் இரட்டை 2 எம்பி கொண்ட மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 5 எம்பி முன்புற செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பிரதான கேமரா 30 எஃப்பிஎஸ் ஆதரவோடு 1080 பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட வீடியோ பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முன்புற கேமரா அம்சத்தை பார்க்கையில், 30 எஃப்பிஎஸ் ஆதரவோடு 720 பிக்சல் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மேலும் பின்புற கேமராவின் மூலம் ஃபில்டர்கள், டைம் லேப்ஸ் புகைப்படம், மேம்பட்ட பனோரமிக் மேக்ரோ, நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், எச்டிஆர் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி
ரியல்மி சி31 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியும் இருக்கிறது. இந்த சாதனத்தில் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ ஆர் ஆதரவோடு இயக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இந்த சாதனம் இரட்டை சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications