ரூ.7,500 பட்ஜெட்டில்.. இதுக்கு மேல வேற என்ன வேணும்! கெத்து காட்டும் புது Realme போன்!

|

சந்தேகத்திற்கு இடமில்லாமல், எக்கச்சக்கமான ஸ்மார்ட்போன்களை.. தொடர்ச்சியான முறையில் அறிமுகம் செய்யும் ஒரு நிறுவனம் உள்ளதென்றால் - அது ரியல்மி (Realme) தான்!

கடந்த வாரம் அறிமுகமான ரியல்மி ஸ்மார்ட்போனின் 'மாடல் நேம்' இந்த வாரமே மறந்து போகும். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பல எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் ரியல்மி நிறுவனம், இன்று இந்தியாவில் ஒரு தரமான பட்ஜெட் போனை அறிமுகம் செய்தது.

விலையை மீறிய அம்சங்கள்!

விலையை மீறிய அம்சங்கள்!

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக ரியல்மி சி30 மாடல், இன்று (ஜூன்.20) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 20:9 டிஸ்ப்ளே, ஆக்டாகோர் யூனிசோக் எஸ்ஓசி, 3ஜிபி வரையிலான ரேம், 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் விரிவாக்கம் என விலையை மீறிய சில அம்சங்களையும் பெற்றுள்ளது. உடன் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களிலும் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில ரெட்மி, சாம்சங் போன்களுக்கு ஆப்பு!

குறிப்பிட்ட சில ரெட்மி, சாம்சங் போன்களுக்கு ஆப்பு!

ரியல்மி சி30 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் மற்றும் பிரதான அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இது ரெட்மி 10ஏ, டெக்னோ ஸ்பார்க் கோ 2022, சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியை வழங்கும் என்பது போல் தெரிகிறது.

இந்த பட்டியலில் ஏற்கனவே வாங்க கிடைக்கும் சில பட்ஜெட்-விலை ரியல்மி ஸ்மார்ட்போன்கள் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ரூ.10,000 பட்ஜெட்ல இப்படி ஒரு 5G போன்-ஆ! என்ன மாடல்? எப்போ அறிமுகம்?ரூ.10,000 பட்ஜெட்ல இப்படி ஒரு 5G போன்-ஆ! என்ன மாடல்? எப்போ அறிமுகம்?

ரியல்மி சி30 - இந்திய விலை மற்றும் விற்பனை:

ரியல்மி சி30 - இந்திய விலை மற்றும் விற்பனை:

இந்தியாவில் ரியல்மி சி30 ஸ்மார்ட்போனின் பேஸிக் 2ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.7,499 க்கும் மற்றும் இதன் 3ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.8,299 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது பம்பூ க்ரீன், டெனிம் பிளாக் மற்றும் லேக் ப்ளூ என்கிற மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். விற்பனையை பொறுத்தவரை, இந்த லேட்டஸ்ட் ரியல்மி போன் வருகிற ஜூன் 27 ஆம் தேதி அன்று மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் நாட்டில் உள்ள ஆஃப்லைன் ரீடெய்ல் சேனல்களின் வழியாக வாங்க கிடைக்கும்

பெரிய டிஸ்பிளே, நல்ல ஸ்டோரேஜ், போதுமான கேமரா!

பெரிய டிஸ்பிளே, நல்ல ஸ்டோரேஜ், போதுமான கேமரா!

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்பதால் ரியல்மி சி30 ஆனது ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) அடிப்படையிலான ரியல்மி யுஐ கோ (Realme UI Go) கொண்டு இயங்குகிறது.

மேலும் இது 720x1600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 88.7 % ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ உடனான 6.5-இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்பிளேவை பேக் செய்கிறது. இது ஆக்டாகோர் யூனிசோக் T612 SoC உடனாக 3ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி சி30 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்ட சிங்கிள் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா உள்ளது. இந்த கேமராவில் எச்டிஆர் மோட் உள்ளதால் இந்த விலைக்கு இது போதுமான கேமரா என்பதில் சந்தேகமே வேண்டாம். செல்பீ மற்றும் வீடியோ சாட்களுக்காக, இதில் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உட்பொதிக்கப்பட்டுள்ளது.

வேற லெவல் ஸ்டோரேஜ், தரமான பேட்டரி!

வேற லெவல் ஸ்டோரேஜ், தரமான பேட்டரி!

ரியல்மி சி30 ஸ்மார்ட்போனின் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக அதன் ஸ்டோரேஜ் திகழ்கிறது. இது 32ஜிபி அளவிலான UFS 2.2 ஸ்டோரேஜை பேக் செய்கிறது. இருப்பினும் ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இந்த லேட்டஸ்ட் ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூஎஸ்பி மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஆன்போர்டு சென்சார்களை பொறுத்தவரை, இது ஆக்ஸலோமீட்டர், ஆம்பியன்ட் லைட் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவைகளை பெற்றுள்ளது. பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 45 நாட்கள் வரையிலான ஸ்டாண்ட்-பை டைம்-ஐ வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக, அளவீட்டில், இது 164.1x75.6x8.5mm மற்றும் எடையில் 182 கிராம் உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Realme launched a new budget smartphone in India with 5000mAh Battery and 1TB Optional storage Check Price Specifications Online and Offline Sale Date

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X