பக்கா பட்ஜெட் மொபைல்., ரூ.6,999 மட்டுமே:விற்பனைக்கு வந்த Realme C3:jio பயணர்களுக்கு கூடுதல் தள்ளுபடி
இந்தியாவில் ரியல்மி நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்
ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் போன்ற வலைதளங்கில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதனத் திரை 400nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10
இந்த ஸ்மார்ட்போனில் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

3ஜிபி/4ஜிபி ரேம் என்ற வகையில் விற்பனை
ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோ மீட்டர் போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி சி3 கேமரா
ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேகமரா, எச்டிஆர் ஆதரவு, பனோரமிக், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலைக்கு தகுந்த அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி சி3 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றியே கவலை இருக்கவே இருக்காது. பின்பு பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு இந்த சாதனம் கண்டிப்பாக பயன்படும். மேலும் 2.4ஜிகாஹெர்ட்ஸ், வைஃபை, யுஎஸ்பி-ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வோல்ட்இ, புளூடூத் 5, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

விலை மற்றும் சலுகை
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. அதேபோல் ரிலையன்ஸ் ஜியோ பயணர்கள் இந்த போனை ரூ.7,550-க்கும் வாங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications