Home
News

Realme C21Y இந்தியாவில் அறிமுகமா? என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

Realme C21Y இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. வெளியீட்டு தேதி ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் வெளியீடு Realme.com இல் நடைபெறும். நினைவுபடுத்த, Realme C21Y கடந்த மாதம் வியட்நாமில் வெளியிடப்பட்டது. இது பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

Realme C21Y இந்தியாவில் அறிமுகமாகிறதா?

Realme C21Y இந்தியாவில் அறிமுகமாகிறதா?

Realme C21Y யுனிசாக் T610 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Realme C21Y ஸ்மார்ட்போன் என்ன விலையில் எதிர்பார்க்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவலின் படி, Realme C21Y இந்தியாவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தொடங்கப்படும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பின் மூலம் அறிவித்துள்ளது.

விலை என்னவாக இருக்கும்?

விலை என்னவாக இருக்கும்?

அர்ப்பணிக்கப்பட்ட மைக்ரோசைட் Realme.com இல் இந்த சாதனம் நேரலைக்கு வந்துள்ளது. டீசர் பக்கம் போன் கிராஸ் ப்ளூ மற்றும் கிராஸ் பிளாக் கலர் ஆப்ஷன்களில் வரும் என்பதை உறுதி செய்கிறது. வியட்நாம் மாடலின் அதே வரம்பில் இதன் விலை இருக்கும் என்று கூறப்படுகிறது. Realme C21Y விலை 4GB + 64GB மாடல் VND 3,240,000 விலையில் வருகிறது. இது இந்திய மதியபின் படி சுமார் ரூ. 10,500 விலையில் அறிமுகமும். அதேபோல் இதன் 3GB + 32 ஜிபி சேமிப்பு VND 3,710,000 ஆகும். இதன் இந்திய விலை சுமார் ரூ. 12,000 ஆகும்.

Realme C21Y விவரக்குறிப்புகள்

Realme C21Y விவரக்குறிப்புகள்

Realme C21Y Android 10- அடிப்படையிலான Realme UI இல் இயங்குகிறது. இது 6.5-இன்ச் HD+ 720 x 1600 பிக்சல்கள் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் மாலி- G52 GPU உடன் இணைந்த ஆக்டா கோர் யுனிசாக் T610 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை சேமிப்பு விருப்பங்கள் உள்ளன. பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாகச் சேமிப்பு விரிவாக்கப்படும் வசதியும் உள்ளது.

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

ரியல்மி போன் மூன்று கேமரா அமைப்பு உடன் வருகிறது. இது 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 5 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உடன் வெளி வருகிறது. Realme C21Y இல் 5,000mAh பேட்டரி உள்ளது.

இதர இணைப்பு அம்சங்கள்

இதர இணைப்பு அம்சங்கள்

இது இன்வெர்ட்டட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இணைப்பிற்காக, ரியல்மி சி 21 ஒய் எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் அம்சங்களுடன் மற்றும் சார்ஜ் செய்வதற்கான மைக்ரோ-யூஎஸ்பி போர்ட்டுடன் வருகிறது. பின்புறத்திலும் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வருகையாக இந்திய ரசிகர்கள் காத்திருக்கும் காலம் மிகவும் குறைவாக இருக்கிறது. நாம் எதிர்பார்ப்பதை விட மிக விரைவில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகமாகப் போகிறது.

Best Mobiles in India

English summary
Realme C21Y India Launch Date Set for August 23 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X