Just In
- just now
சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
- 36 min ago
வாட்ஸ்அப் இல் 'குக் வித் கோமாளி ஸ்டிக்கர்' பேக் வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்..
- 1 hr ago
அட்டகாசமான விவோ Y20s G ஸமார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
- 1 hr ago
"2.o"- இனி "ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி" ஆதிக்கம்: பெஸ்ட் கிளாஸ் கேமிங் ஸ்மார்ட்போன்: ஆரம்பமே சலுகையோடு!
Don't Miss
- Movies
கோவை உணவகத்தில் பெண்கள் மீது தாக்குல் விவகாரம்… கமல்ஹாசன் பாய்ச்சல் !
- News
திண்பண்டங்களை வாங்கி கொடுத்து 8 மாதமாக 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. 3 பேர் கைது
- Automobiles
"தயவு செய்து இத மட்டும் செய்யாதீங்க" -வாகனங்களை பறிகொடுத்து நிற்கும் உரிமையாளர்கள் புலம்பல்...
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Sports
இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவது பத்தியெல்லாம் யோசிக்கலை... விஜய் சங்கர் சொல்லிட்டாரே!
- Finance
கொரோனா எதிரொலி.. தற்காலிக பணியமர்த்தல் அதிகரிக்கும்.. நிரந்தர வேலை குறையும்..!
- Lifestyle
மிதுனம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணுமாம்.. உங்க ராசியும் இருக்கா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரியல்மி சி20, ரியல்மி சி21, ரியல்மி சி25 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் புதிய ரியல்மி சி20, ரியல்மி சி21, ரியல்மி சி25 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின்
விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி சி25 டிஸ்பிளே
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி சி25 சிப்செட் வசதி
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி25 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி25 கேமராக்கள்
ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். ரியல்மி சி25 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெறுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி சி25 விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி25 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. வாட்டர் கிரே மற்றும் வாட்டர் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். வரும் ஏப்ரல் 16-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் ரியல்மி சி25 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.
எல்லாமே தனித்துவ அம்சம்., நாட்கள் கணக்காக பேட்டரி ஆயுள்- அட்டகாச ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ!

ரியல்மி சி20 டிஸ்ப்ளே
ரியல்மி சி20 ஸ்மார்ட்போனானது 6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் வாட்டர் டிராப் உச்சநிலையை கொண்டுள்ளது. மேலும் இதில் பாதுகாப்பு அமைப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி சி20 பேட்டரி
ரியல்மி சி20 ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. இது மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொருத்தவரை இதில் 8 எம்பி பின்புற கேமரா எல்இடி பிளாஷ் உடன் வருகிறது. மேலும் 5 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் ஒற்றை மோனோ ஸ்பீக்கர் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி சி20 விலை
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. மேலும் கூல் ப்ளூ மற்றும் கூல் கிரே நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

Realme C21 சிறப்பம்சம்
- 6.5 இன்ச் 720x1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட்
- அண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்
- ட்ரிபிள் பின்புற கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ்
- 5 மெகாபிக்சல் செல்பி கேமரா
- பின்புற கைரேகை ஸ்கேனர்
- 10W சார்ஜர் ஆதரவு
- 5,000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி21 விலை
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி21 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. மேலும் கருப்பு, நீல நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு வரும் ஏப்ரல் 13-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999