ஜூலை 29 அடுத்த விற்பனை: ரியல்மி சி 11 பக்கா பட்ஜெட் விலை!

|

ரியல்மி சி 11 அடுத்த விற்பனை ஜூலை 29 ஆம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வழியாக விற்பனைக்கு வருகிறது. பக்கா பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனில் விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி சி 11

ரியல்மி சி 11

ரியல்மி சி 11 இன் அடுத்த விற்பனை ஜூலை 29 ஆம் தேதி நடைபெறுகிறது. ரியல்மி சி 11 விலை இந்தியாவில் ரூ .7,499 ஆக பட்ஜெட் விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு கட்டமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மூலம் ஜூலை 29 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு வாங்கலாம்.

6.5 இன்ச் டிஸ்ப்ளே

6.5 இன்ச் டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் இரட்டை பின்புற கேமராக்களோடு வரும். ரியல்மி சி 11 இ-காமர்ஸ் வலைத்தளம் மூலம் விற்பனை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். ரியல்மி சி தொடரில் உள்ள சி 3 ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் முன்னேற்றம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1600 x 720 பிக்சல் திர்மானம்

1600 x 720 பிக்சல் திர்மானம்

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

லோன், பென்ஷன், இன்சூரன்ஸ் மூன்றையும் குறிவைத்த வாட்ஸ்அப்.! முழுவிவரம்.!லோன், பென்ஷன், இன்சூரன்ஸ் மூன்றையும் குறிவைத்த வாட்ஸ்அப்.! முழுவிவரம்.!

13எம்பி பிரதான கேமரா

13எம்பி பிரதான கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

இந்த ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் உடன் IMG PowerVR GE8320 GPU வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

4 ஜி வோல்ட்இ, புளூடூத் 5, வைஃபை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், டூயல் சிம் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.7,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme C11 Smartphone Next Sale Start July 29 in India via Flipkart and Realme.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X