Realme C11 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் அதிகரிப்பா? இப்போது விலை என்ன தெரியுமா?

|

சமீபத்திய தகவல்களின்படி, Realme அதன் Realme C11 பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலையை உயர்த்தியுள்ளது. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் தனது ஸ்மார்ட்போனின் விலையை எந்த அறிவிப்பும் செய்யாமல் உயர்த்தியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. மேலும், இது இரண்டாவது முறையாக அதே சாதனத்தின் விலை உயர்த்தப்பட்டதைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Realme C11 சாதனத்தின் முந்தைய விலையில் இருந்து எவ்வளவு விலையை நிறுவனம் அதிகரித்துள்ளது. இது எப்போதில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று பார்க்கலாம்.

Realme C11 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் அதிகரித்ததா?

Realme C11 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் அதிகரித்ததா?

Realme C11 ஸ்மார்ட்போனின் முந்தைய விலையில் இருந்து மீண்டும் நிறுவனம் ரூ.500 விலையை இப்போது அதிகரிப்பு செய்துள்ளது. இப்போது இந்த புதிய விலையை நிறுவனம் அதன் Realme ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளுடன் மற்ற தளங்களில் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது. Realme C11 சாதனத்தின் புதிய விலைப் பட்டியல் சமீபத்தில் தான் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட விலை இரண்டாவது முறையாக நடந்துள்ளது என்று சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எந்த வேரியண்ட் மாடலின் விலைகளில் மாற்றங்கள் உள்ளது?

எந்த வேரியண்ட் மாடலின் விலைகளில் மாற்றங்கள் உள்ளது?

இது முதலில் கவனிக்கப்பட்ட பிறகு சில சில்லறை விற்பனையாளர்களும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பான உண்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். Realme C11 ஸ்மார்ட்போனின் விலை அதன் இரண்டு வகைகளுக்கும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. Realme C11 ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பக மாறுபாட்டின் முந்தைய சில்லறை விலையான ரூ. 6,999 ஆக இருந்து, ஆனால் இதற்கு பதிலாக இப்போது இந்த ஸ்மார்ட்போன் இனி ரூ. 7,499 என்ற விலையில் கிடைக்கும்.

இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..

Realme C11 இன் 4GB வேரியண்ட் விலை என்ன?

Realme C11 இன் 4GB வேரியண்ட் விலை என்ன?

மறுபுறம், Realme C11 இன் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாடல் அதன் முந்தைய விற்பனை விலையான ரூ. 8,799 விலையில் இருந்து இப்போது விலை அதிகரிப்பைப் பெற்று வெறும் ரூ. 8,999 என்ற விலையில் வாங்குவதற்கு இனி கிடைக்கும். சந்தையில் உள்ள மற்ற பிராண்டுகளான Redmi, Motorola, Micromax, Tecno போன்றவற்றின் போட்டியால், Realme C11 இன் சமீபத்திய விலை உயர்வு சாதனத்தின் எதிர்காலத்திற்கு நல்ல முடிவாக இருக்காது.

Realme C25s, Realme 8, Realme 21 மற்றும் Realme 8 5G விலையும் அதிகரிப்பா?

Realme C25s, Realme 8, Realme 21 மற்றும் Realme 8 5G விலையும் அதிகரிப்பா?

Realme C11 ஆனது விலை உயர்வைக் கண்ட ஒரே ஸ்மார்ட்போன் அல்ல, ஏனெனில் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் சமீபத்தில் Realme C25s, Realme 8, Realme 21 மற்றும் Realme 8 5G உள்ளிட்ட அதன் பிற சாதனங்களின் விலைகளையும் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனத்தின் விவரக்குறிப்புகளை நினைவுபடுத்த, Realme C11 ஆனது 20:9 விகிதத்துடன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 89.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவைக் கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஃபோன் octa-core 1.6GHz செயலி மற்றும் IMG 8322 GPU இல் இயங்குகிறது.

70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?

Realme C11 சிறப்பம்சம்

Realme C11 சிறப்பம்சம்

இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் கூடுதலாக 256 ஜிபி வரை எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய நினைவகத்தை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Realme UI 2.0 இல் இயங்குகிறது. Realme C11 சாதனத்தின் பின்புறம் எல்இடி ஒளிரும் விளக்குடன் 8 MP கேமராவைக் கொண்டுள்ளது. சாதனம் முன்பக்கத்தில் 5 MP செல்ஃபி ஷூட்டருடன் வருகிறது. இந்த Realme C11 கைபேசி 5000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் கூல் ப்ளூ மற்றும் கூல் கிரே வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme C11 Price Hiked Once Again And The Retail Price Now Starts At Rs 7499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X