அப்படி என்ன இருக்கு இந்து போன்ல- மீண்டும் விலை உயர்வு பெற்ற ரியல்மி சி11 (2021): வரவேற்பு அமோகமா இருக்கே!
ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ரியல்மி ஸ்மார்ட்போன் விலை உயர்வை அறிவித்தது. தற்போது ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போன் நாட்டில் இரண்டாவது முறையாக விலை உயர்வை பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000 என்ற விலைப்பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது.

ரியல்மி சி11 (2021) புதிய விலை விவரங்கள்
ரியல்மி சி11 (2021) புதிய விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.6999 ஆகவும் உயர்தர மாடல் ஸ்மார்ட்போனான 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடல் விலை ரூ.8499 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது விலை உயர்வை பெற்றிருக்கிறது. இந்த விலை உயர்வுக்கு பிறகு 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.6999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.7499 ஆக இருக்கிறது. அதேபோல் உயர்தர வேரியண்ட் மாடல் ஆன 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.8499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.8999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கூல் க்ரே மற்றும் கூல் ப்ளூ வண்ண விருப்பத்தில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போன் வாங்க தகுந்ததா
ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போன் வாங்க தகுந்ததா என்ற விவரங்களை பார்க்கலாம். மெசேஜ் அனுப்புதல் மற்றும் அழைப்பு போன்ற சாதாரண பயன்பாட்டிற்கு சிறந்த மொபைல் தேடுகிறீர்கள் என்றால் அதற்கு ரியல்மி சி11 (2021) தகுதியான சாதனமாக இருக்கும். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்02 போன்ற ஸ்மார்ட்போன்கள் இதே விலைப்பிரிவில் சிறந்த கேமரா அம்சங்களுடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி சி11 (2021) விவரக்குறிப்புகள்
ரியல்மி சி11 (2021) விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் மினி டிராப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் 1600 x 720 பிக்சல்களோடு வருகிறது. 20: 9 என்ற விகிதத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அமைப்பைக் குறித்து பார்க்கையில், இந்த கேமரா அம்சம் கைரேகை ஈர்ப்பதில் இருந்து விடுபடுகிறது. மேலும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்பதால் கைரேகை சென்சார் இதில் இல்லை.

256 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதி
அதன் ஹூட்டின் கீழ், ரியல்மே சி 11 (2021) ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி 9863ஏ செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. ரியல்மி யுஐ கோ பதிப்பில் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இது வருகிறது.

8 எம்பி பின்புற கேமரா அமைப்பு
ரியல்மி சி 11 (2021) பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் உட்பட ஒற்றை 8 எம்பி பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. டிஸ்ப்ளேயின் மேல் மையத்தில் உச்ச நிலைக்குள் 5 எம்பி செல்பி கேமரா துளை பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 9ஏ சாதனத்துக்கு போட்டியாக கருதப்படுகிறது. ரியல்மி சி 11(2021) நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாகும்.


Click it and Unblock the Notifications