Home
News

இப்படி ஒரு Earbuds-க்கு தானே வெயிட் பண்ணோம்.. 53dB ANC, AI டிரான்ஸ்லேஷன், 48Hrs பேட்டரி, IP55 ரேட்டிங்!

ஒன்பிளஸ் நிறுவனம் 55dB ஹைப்ரிட் ANC உடனான அதன் லேட்டஸ்ட் இயர்பட்ஸ் மாடல் ஆனா ஒன்பிளஸ் பட்ஸ் 4 -ஐ () அறிமுகம் செய்த வேகத்தில் ரியல்மி (Realme) நிறுவனம் இந்தியாவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளிலும் 53dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட அதன் லேட்டஸ்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

அது ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ (Realme Buds Air 7 Pro) இயர்பட்ஸ் மாடல் ஆகும். கேஸுடன் சேர்த்து, ஒரே சார்ஜில் 48 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குவதாக கூறப்படும் இந்த இயர்பட்ஸ் ஆனது 45ms வரையிலான லோ லேட்டன்சி மோட்-ஐயும் ஆதரிக்கின்றன. மேலும் இது AI லைவ் டிரான்ஸ்லேட்டர், ஃபேஸ் டு ஃபேஸ் டிரான்ஸ்லேட்டர் மற்றும் AI இன்குவைரி AI அம்சங்களுக்கான ஆதரவுடன் வருகிறது.

இப்படி ஒரு Earbuds-க்கு தானே வெயிட் பண்ணோம்!

ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோவின் விரிவான அம்சங்கள்: ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோவின் பட்ஸ்கள் இன்-இயர் வடிவமைப்பை பெற்றுள்ளன, மேலும் 11mm மற்றும் 6mm டூயல்-டாக் டிரைவர் அமைப்பையும் கொண்டுள்ளன. இது 6-மைக் AI-ஆதரவு கொண்ட நாய்ஸ் கேன்சலேஷன் அமைப்பை கொண்டுள்ளன மற்றும் முன்னரே குறிப்பிட்டபடி இது 53dB ANC வரையிலான ஆதரவை வழங்கும்

ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ மாடல் ஆனது ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் சான்றிதழ் மற்றும் LHDC ஆடியோ கோடெக் ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த இயர்போன்கள் ஸ்விஃப்ட் பேர், ப்ளூடூத் 5.4 மற்றும் டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ள. குறைந்தபட்ச ஆடியோ-விஷுவல் லேக்கிற்கு இந்த பட்ஸ்கள் 45ms வரையிலான லோ லேடன்சியை ஆதரிக்கின்றன.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP55 ரேட்டிங் உடன் இந்த இயர்பட்ஸ் AI லைவ் டிரான்ஸ்லேட்டர் போன்ற AI அம்சங்களை ஆதரிக்கிறது. இதன்கீழ் பயனர்கள் ஜெமினி AI வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் நேரடி மொழிபெயர்ப்பை பெறலாம். ஃபேஸ் டு ஃபேஸ் டிரான்ஸ்லேட்டர் அம்சம் நிகழ்நேர உரையாடல் மொழிபெயர்ப்பு மற்றும் குரல் ஒளிபரப்பை அனுமதிப்பதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் AI இன்குவைரி டூல் ஆனது பயனர்கள் கூகுள் ஜெமினியை எளிதாக அணுக உதவும்.

ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ மாடலின் கேஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் அது 48 மணிநேரம் வரையிலான பிளேபேக் டைமை வழங்கும் என்று கூறப்படுகிறது. LHDC உடன், மொத்த பிளேபேக் நேரம் 28 மணிநேரமாக குறையும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், 10 நிமிடங்கள் குவிக் சார்ஜ் செய்தால் 11 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. சுமார் 43.4 கிராம் எடையுள்ள சார்ஜிங் கேஸில் USB டைப்-சி போர்ட் உள்ளது. ஒவ்வொரு இயர்போனும் சுமார் 4.89 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது.

ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோவின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோவின் விலை ரூ.5,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது Fiery Red, Glory Beige, Metallic Grey மற்றும் Racing Green 4 ஆகிய கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற மே 30 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், மின்த்ரா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆன ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) மாடல், இப்போதைக்கு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில், வரும் 2025 ஜூன் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.5,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Buds Air 7 Pro Launched in India Price Specifications Features Sale Starts May 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X