எல்லாமே தனித்துவ அம்சம்., நாட்கள் கணக்காக பேட்டரி ஆயுள்- அட்டகாச ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ!

|

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்கள் 28 மணிநேர பேட்டரி ஆயுள், நாய்ஸ் ரத்து அம்சத்தோடு வருகிறது. இந்த ரியல்மி பட்ஸ் ஏர் 2 விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.3800 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ ட்ரூ இயர்பட்ஸ்

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ ட்ரூ இயர்பட்ஸ்

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ ட்ரூ பல்வேறு தனித்துவ அம்சங்களோடு வருகிறது. இந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ டிடபிள்யூஎஸ் இயர்போன்கள் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இயர்பட்ஸ்களானது ஒரே சார்ஜிங்கில் 28 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இந்த இயர்போன்களானது கூர்மையான மற்றும் தெளிவான அழைப்புகளுக்கு இரட்டை மைக் ஆதரவு இருக்கிறது. அதேபோல் இதில் இருக்கும் நாய்ஸ் ரத்து அம்சமானது இயர்போன்களை அகற்றாமல் வெளிப்புற சுற்றுச்சூழல் ஒலியை தெளிவாகக் கேட்க உதவுகிறது. இயர்பட்ஸ்களை ரியல்மி இணைப்பு பயன்பாட்டுடன் இணைக்க முடியும். அதேபோல் இயர்பட்ஸ்களை கட்டுப்படுத்த டச் செயல்பாடு அம்சம் உதவுகிறது.

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ டிடபிள்யூஎஸ் விலை

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ டிடபிள்யூஎஸ் விலை

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ டிடபிள்யூஎஸ் விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனமானது இந்திய விலைப்படி தோராயமாக ரூ.3,800 ஆக இருக்கிறது. அறிமுக சலுகையாக கிடைக்கும் இந்த சாதனத்தின் இதே விலை எதுவரை நீடிக்கும் என நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் கிடைக்கும் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது ஆக்டிவ் பிளாக் மற்றும் காம் க்ரே வண்ணங்களில் கிடைக்கிறது. அதேபோல் ரியல்மி டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் உலக சந்தையில் கிடைக்கும் தன்மை குறித்து நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த இயர்பட்ஸ் ஆனது 10 மிமீ லிக்விட் கிரிஸ்டல் பாலிமர் பேஸ் பூஸ்ட் டிரைவர் மூலம் வருகிறது. மேலும் பேஸ் பூஸ்ட்+ அல்காரிதம் ஆகியவற்றோடு வருகிறது. மேலும் இதில் ஆழமான பேஸ் மற்றும் தெளிவான ஸ்டீரியோ ஒலி ஆதரவை இது வழங்குகிறது.

இந்தியாவின் 2021 டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்: டாப்பும் இந்த துறைதான்., முடிவும் இந்த துறைதான்!இந்தியாவின் 2021 டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்: டாப்பும் இந்த துறைதான்., முடிவும் இந்த துறைதான்!

பிரத்யேக ஏஎன்சி ஆதரவு

பிரத்யேக ஏஎன்சி ஆதரவு

ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் குறித்து நிறுவனம் மிகவும் விளம்பரத்தப்பட்ட விஷயம் ஆனது அது ஏஎன்சி ஆதரவாகும். இந்த அம்சமானது சுற்றுப்புறத்தை சுற்றியுள்ள சத்தத்தை 25 டெசிபல் வரை குறைக்கும் தன்மையாகும். இதன் வெளிப்படைத்தன்மை பயன்முறையானது இயர்பட்ஸ்களை காதுகளில் இருந்து வெளியே எடுக்காமல் வெளிப்புற சத்தத்தை கேட்க அனுமதிக்கும்.

அதிகுறைந்த மின் நுகர்வு, நிலையான இணைப்பு

அதிகுறைந்த மின் நுகர்வு, நிலையான இணைப்பு

அதேபோல் இந்த இயர்பட்ஸ்களில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதில் அதிகுறைந்த மின் நுகர்வு மற்றும் நிலையான இணைப்புக்கு ஆர்2 சில் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இஎன்சி (சுற்றுச்சூழல் இரைச்சல் ரத்து) வழிமுறை மிகவும் உதவியாக இருக்கிறது. இதில் இரட்டை மைக் அமைப்பு இருக்கிறது. இரண்டு இயர்பட்ஸ்களும் ஒரே சமயத்தில் ஒலியை வழங்குகின்றன

28 மணிநேர ப்ளே பேக் அனுபவம்

28 மணிநேர ப்ளே பேக் அனுபவம்

அதேபோல் ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ சாதனமானது ஏஎன்சி ஆஃப் பயன்முறையுடன் 28 மணிநேர ப்ளே பேக் அனுபவத்தை வழங்குகிறது. இயர்பட்ஸ்கள் ஏஎன்சி பயன்முறையானது கூடுதல் ப்ளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. இதன் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இதில் யூஎஸ்பி டைப்சி சார்ஜிங் போர்ட் மூலமாக 2 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக சமயத்தில் விரைவான 10 நிமிட சார்ஜிங் மூலம் 3 மணிநேர ப்ளேபேக் அனுபவத்தை வழங்குகிறது.

டிடபிள்யூஎஸ் ப்ளூடூத் 5.2 பயன்முறை

டிடபிள்யூஎஸ் ப்ளூடூத் 5.2 பயன்முறை

இயர்போன்கள் ஆனது வாட்டர் ரெசிஸ்டெண்ட் ஐபிஎக்ஸ் 5 மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. அதோடு இந்த இயர்பட் டச் கட்டுப்பாட்டு அம்சத்தை கொண்டுள்ளன. இந்த டச் பயன்பாடானது இசை மற்றும் அழைப்புகளுக்கான அனுகலை வழங்குகிறது. அதேபோல் டச் கட்டுப்பாடு மூலம் இணைப்பு பயன்பாடுகளை தனிப்பயனாகப் பயன்படுத்தலாம். டச் கட்டுப்பாடுகள் ஆனது சத்தத்தை ரத்து செய்யவும், கேமிங் பயன்முறையை அணைக்கவ என பல்வேறு கூடுதல் அம்சத்தையும் அனுமதிக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஆனது டிடபிள்யூஎஸ் ப்ளூடூத் 5.2 பயன்முறையோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Buds Air 2 Neo TWS Earbuds Launched with 28 Hours Playtime, Bass Boost plus Algorithm

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X