ஆப்பிள் மேக்புக் அச்சில் வெளியாகும் ரியல்மி புக் லேப்டாப்..எப்போது அறிமுகம் தெரியுமா?

|

ரியல்மி நிறுவனம் வரும் ஜூன் 15 அன்று ஒரு புதிய அறிமுக நிகழ்வை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது ரியல்மி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டில் இயங்கும் ரியல்மி ஜிடி 5 ஜி (Realme GT 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகளவில் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. அதேபோல், ரியல்மி பிராண்டின் முதல் லேப்டாப் Realme Book மற்றும் டேப்லெட்டை நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப் அறிமுகம்

இந்த வாரத் தொடக்கத்தில் ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் ஒரு புகைப்படத்தின் மூலம் நிறுவனத்தின் முதல் லேப்டாப் அறிமுகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தினார். ​​ரியல்மி லேப்டாப்பின் ஒரு சிறிய பகுதியை மட்டும் காண்பிக்கும் புகைப்பதை அவர் வெளியிட்டுள்ளார். ரியல்மி லேப்டாப்பின் தோற்றம் முழுமையாகப் புகைப்படத்தில் வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இது பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் போல தோற்றமளிக்கிறது.

ஆப்பிள் மேக் புக் தோற்றத்தில் ரியல்மி புக் (Realme Book)

ஆப்பிள் மேக் புக் தோற்றத்தில் ரியல்மி புக் (Realme Book)

இப்போது, ​​வெளிவந்துள்ள புதிய கசிவுகளின் படி, ரியல்மியின் இந்த லேப்டாப் சாதனத்தின் முழு தோற்றத்தை வழங்குகின்றது. மேலும், இந்த சந்தானத்திற்கு ரியல்மி நிறுவனம் ரியல்மி புக் (Realme Book) என்று பெயரிட்டுள்ளது என்பதும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த சாதனம் அப்படியே ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் போன்ற வடிவமைப்பு பெற்றுள்ளது. ரியல்மி புக் ஒரு அலுமினிய பாடியுடன் மெல்லிய பெசல்களுடன் வருகிறது. இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால் இந்த லேப்டாப் 3: 2 டிஸ்பிளே விகிதத்தைப் பின்பற்றுகிறது.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

ரியல்மி புக்கின் சில முக்கிய சிறப்பம்சங்கள்

ரியல்மி புக்கின் சில முக்கிய சிறப்பம்சங்கள்

மேலும், இது ஒரு விற்பனை புள்ளியாக நிறுவனம் முன்னிலைப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப்பின் அடிப்பகுதியில் டூயல் ஸ்பீக்கர் கிரில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்பீக்கர்களுக்கான சரியான இடம் என்று தான் சொல்லவேண்டும். காரணம், ஒலி பிரதிபலிப்புக்கும் அதன் மூலம் பெருக்கத்திற்கும் இது பெரிதும் உதவும். ரியல்மி புக்கில் யூ.எஸ்.பி-சி போர்ட்களும் இருக்கலாம், அதில் சார்ஜிங் போர்ட்டும் அடங்கும், ஆனால் புகைப்படங்கள் அவற்றைக் காட்டவில்லை.

எல்லாம் ஒரே மாதிரியா இருக்கு, ஆனா இது இல்லாம போயிடுச்சே..

எல்லாம் ஒரே மாதிரியா இருக்கு, ஆனா இது இல்லாம போயிடுச்சே..

ரியல்மி லேப்டாப்பின் மேற்புற பாடியில் பிராண்டின் நுட்பமான வர்த்தகத்தைப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மேக்புக் மாடல்களில் ஒளிரும் தன்மையோடு காணப்படும் ஆப்பிள் லோகோவைப் போல இல்லாமல், வெறும் சாதாரணமான எழுத்துக்களாக லேப்டாப்பின் மேற்பரப்பில் அச்சிடப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், ரியல்மி நிறுவனம் இத்துடன் புதிய டேப் மாடலையும் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தோற்றமும் ஆப்பிள் டேப்களுடன் ஒத்ததாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடகை வீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி- ஆதார் அட்டை திருத்தத்தில் இனி அந்த தொல்லை இல்லை!வாடகை வீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி- ஆதார் அட்டை திருத்தத்தில் இனி அந்த தொல்லை இல்லை!

அன்று ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த அதே காரியத்தை இன்று ரியல்மி செய்துள்ளதா?

அன்று ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த அதே காரியத்தை இன்று ரியல்மி செய்துள்ளதா?

ஆப்பிள் மேக்புக் போன்று இருக்கும் இந்த ரியல்மி புக் பற்றிய மற்றொரு நம்ப முடியாத ஒரு சுவாரசிய விஷயம் என்னவென்றால், இந்த சாதனத்தின் அறிமுகம் பற்றி டீஸ் செய்ய பதிவிடப்பட்ட புகைப்படத்தில் ரியல்மி புக் ஒரு என்வலப் கவரில் இருந்து சிறிதளவு வெளியில் தெரியும் படி டீஸ் செய்யப்பட்டிருந்தது. சற்று பின்னோக்கி சென்றால், ஸ்டீவ் ஜாப்ஸ் 2008 ஆம் ஆண்டில் மேக்புக்கை அறிமுகம் செய்த போது, இதேபோன்ற ஒரு என்வலப் ஒன்றிலிருந்து தான் அதை வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme Book Laptop Looks Like Its Heavily Inspired By The Apple MacBook : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X