Home
News

ஜூன் 14 குள்ள வாங்கினா.. இந்த 2 Realme போனும் சீப் ஆன விலைக்கு கிடைக்கும்.. அதுவும் GT சீரீஸ் மாடல்கள்!

200எம்பி கேமரா, 100W பாஸ்ட் சார்ஜிங், 7000mAh பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களுடன்.. ரியல்மி நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் இதுவரை அறிமுகம் செய்திராத அளவிலான மிகவும் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Premium Flagship Smartphone) ஒன்றை அறிமுகம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அது ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) மாடலாகும்.

இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி (Launch Date) குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) மற்றும் ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) ஆகிய 2 ஸ்மார்ட்போன்கள் மீதும் திடீரென "லிமிடெட் டைம் டிஸ்கவுண்ட்" அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14 வரை இந்த 2 Realme போனும் சீப்-ஆ கிடைக்கும்!

ரியல்மி நிறுவனமானது இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையை "பெஸ்ட்செல்லர் டேஸ்" (Realme Bestseller Days) என்கிற பெயரின்கீழ் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக நடத்துகிறது. இந்த சிறப்பு விற்பனை ஜூன் 14 ஆம் தேதி வரை நடக்கும் என்றும், இதன் கீழ் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடியில் ஆனது ரியல்மி இந்தியா (Realme India) வலைத்தளத்திலும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் சலுகைகள் (Realme GT 7 Offers, Discounts): ரியல்மி பெஸ்ட்செல்லர் டேஸ் என்கிற இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ரூ.3,000 வங்கி சலுகை அல்லது ரூ.5,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை பெறுவார்கள்.

இந்த சலுகையின் மூலம், ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.34,999 க்கு வாங்கலாம். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.39,999 ஆகும். இதேபோல ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை முறையே ரூ.37,999 மற்றும் ரூ.41,999 க்கு வாங்கலாம். நினைவூட்டும் வண்ணம் இந்த வேரியண்ட்களின் அசல் விலை முறையே ரூ.42,999 மற்றும் ரூ.46,999 ஆகும்.

ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் சலுகைகள் (Realme GT 7T Offers, Discounts): ஜூன் 14 வரை நடக்கவுள்ள ரியல்மி பெஸ்ட்செல்லர் டேஸ் என்கிற இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ரூ.3,000 வங்கி சலுகை அல்லது ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை பெறுவார்கள்.

இந்த சலுகையின் மூலம், ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.28,999 க்கு வாங்கலாம். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.34,999 ஆகும். இதேபோல ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை முறையே ரூ.31,999 மற்றும் ரூ.35,999 க்கு வாங்கலாம். நினைவூட்டும் வண்ணம் இந்த வேரியண்ட்களின் அசல் விலை முறையே ரூ.37,999 மற்றும் ரூ.41,999 ஆகும்.

இதுதவிர்த்து இந்த 2 ஸ்மார்ட்போன்கள் மீதும் 9 மாதங்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் (No Cost EMI Options) வழங்கப்படுகின்றன. ஜூன் 14 ஆம் தேதியோடு முடிவடையும் இந்த விற்பனையில் சிறப்பு சலுகைகளை தவிர எக்ஸ்சேன்ஜ் ஆபரும் (Exchange Offer) அணுக கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் மீது ரூ. 37,998 வரை தள்ளுபடியும், ரியல்மி ஜிடி 7டி ஸ்மார்ட்போன் மீது ரூ.33,248 வரை தள்ளுபடியும் பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Bestseller Days Sale Discounts on Realme GT 7 Realme GT 7T Until June 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X