Just In
- 11 hrs ago
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக் விற்பனை 2022: முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
- 12 hrs ago
இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!
- 13 hrs ago
அசல் விலையிலிருந்து பாதிக்கு-பாதி தள்ளுபடி.. புது போன் வாங்க இதவிட நல்ல சான்ஸ் கிடைக்காது பாஸ்..
- 14 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
பிளாஸ் டூ தேர்வில் மாறிய வினாத்தாள்.. பரிதவித்த மாணவர்கள்.. ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை
- Movies
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்.. பாராட்டித் தள்ளிய மோகன்லால்.. சூடுபிடித்த ‘விக்ரம்’ புரமோஷன்!
- Automobiles
போலீஸ் திடீர் அதிரடி... ஒரே வாரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... ஏன் தெரியுமா?
- Finance
மொபைல் கேமிங் சந்தை இந்த ஆண்டு இத்தனை பில்லியனை தாண்டுமா?
- Sports
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரதமர் பங்கேற்பு.. அகமதாபாத்தில் குவிந்த போலீசார்..அதுவும் எப்படி தெரியுமா
- Lifestyle
மட்டன் சுக்கா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் அறிமுகமான ரியல்மி 9ஐ- ரூ.13,999 மட்டுமே., 6ஜிபி ரேம், 50எம்பி கேமரா, டைனமிக் ரேம் விரிவாக்க வசதி!
ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி வசதியோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

டிரிபிள் ரியர் கேமராக்கள்
ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி வசதியோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.13,999 என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 லாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தி பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை 70 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 48.4 மணி நேர பேச்சு நேரத்தையும், 995 மணி நேர காத்திருப்பு நேரத்தையும் வழங்குகிறது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த ரியல்மி ஸ்மார்ட்போன்
ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (இன்று) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனின் வாரிசாக இந்த புதிய ரியல்மி சாதனம் இருக்கிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது.

ரியல்மி 9ஐ விலை மற்றும் கிடைக்கும் தன்மை
இந்தியாவில் ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்களை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரிண்ட்களில் வருகிறது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடலின் விலை ரூ.13,999 ஆக இருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,999 ஆக இருக்கிறது. இந்த சாதனம் பிரஸம் பிளாக் மற்றும் பிரஸம் ப்ளூ வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 25 முதல் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் நாட்டில் உள்ள ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.

பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்
ஜனவரி 22 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்-ல் மட்டுமே ஆரம்ப விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்ப வசதியோடு ரூ.13,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,999 எனவும் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி 9ஐ சாதனம் கடந்த மாதம் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த சாதனம் ஒற்றை மாறுபாடு அதாவது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.20,500 என்ற விலைக்குறியுடன் இருந்தது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ரியல்மி 9ஐ ஆனது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் ரியல்மி யுஐ 2.0 ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,412 பிக்சல்கள்) டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. மேலும் இந்த டிஸ்ப்ளே டிராகன் டிரெயில் ப்ரோ கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி, அட்ரினோ 610 ஜிபியு வசதியோடு வருகிறது. இது டைனமிக் ரேம் விரிவாக்க வசதியையும் கொண்டுள்ளது. அதேபோல் ரியல்மி 9ஐ மென்பொருள் புதுப்பிப்பு மூலம் அறிமுகப்படுத்தவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா
ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. அதேபோல் கேமரா அமைப்பில் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியைக் கொண்டிருக்கிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்471 செல்பி கேமரா வசதி இருக்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி
ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு வசதியை கொண்டிருந்தாலும் இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஹெட்போன் ஜாக் ஆகிய ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இதில் இருக்கிறது.

70 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்
ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 லாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தி பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை 70 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 48.4 மணி நேர பேச்சு நேரத்தையும், 995 மணி நேர காத்திருப்பு நேரத்தையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 190 கிராம் ஆகும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999