Just In
- 1 hr ago
இனி மொத்த ஆரோக்கியமும் ஒற்றை கையில்: நீடித்த ஆயுளுடன் Samsung Smart Watch அறிமுகம்!
- 1 hr ago
அமேசானில் சலுகை மழை: கம்மி விலையில் ஸ்மார்ட்போன்கள்.! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.!
- 2 hrs ago
Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!
- 2 hrs ago
SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!
Don't Miss
- Movies
தகிக்கும் விலைவாசி உயர்வு, இதுல தியேட்டர் டிக்கெட் விலை உயர்வு கோரிக்கை வேற: ரசிகர்கள் ஏற்பார்களா?
- News
"சூடான பிரியாணி" செஸ் ஒலிம்பியாடுக்காக உழைத்த போலீசாருக்கு தன் கையால் பரிமாறிய டிஜிபி சைலேந்திர பாபு
- Finance
2030ல் செஞ்சுரி போட்டுவிடுவோம் - வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால்
- Lifestyle
இந்த உணவுகளை தினமும் நீங்க எடுத்துகிட்டா உங்களுக்கு மாரடைப்பு வராதாம் தெரியுமா?
- Sports
மும்பை அணியில் ரஷித் கான், சாம்கரன்..தென்னாப்பிரிக்காவில் வேலையை காட்டும் ஐபிஎல் அணிகள்..முழு விவரம்
- Automobiles
பூட்டப்பட்ட காரை டென்னிஸ் பந்தை வைத்து திறக்க முடியுமா? உண்மை என்ன?
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
காத்திருப்புக்கு கிடைத்த பலன்: ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் இந்தியாவில் அறிமுகம் விரைவில்- உயர்தர அம்சங்கள்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரியல்மி அதன் சமீபத்திய சாதனங்களில் ஒன்றான ரியல்மி 9ஐ சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்தியாவில் 9 சீரிஸ் தொடரில் சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக ரியல்மி இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய சாதனமானது ரியல்மி 9 தொடர் மாடல்களில் கிடைக்கும் எனவும் இது ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் சாதனமாக இருக்கும் எனவும் உறுதிப்படத்தகவல் தெரிவிக்கிறது.

ரியல்மி 9 தொடர் சாதனங்கள்
தனியார் தொழில்நுட்பத் தளத்திற்கு ரியல்மி மாதவ் ஷெத் அளித்த பேட்டியில், ரியல்மி 9 தொடரின் இந்த சாதனங்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என உறுதி அளித்தார். இருப்பினும் நிறுவனம் தற்போது வரை ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் சாதனத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிடவில்லை. ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் தொடர்பான தகவல்கள் சமீபத்திய நாட்களாக கசிந்த வண்ண இருக்கிறது. ஒரு சில ரெண்டர் தகவல்கள் ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரியல்மி 9 ப்ரோ சாதனத்தின் சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர்
ரியல்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டீசருடன் இந்தியாவில் ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது. ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனின் சில தகவல்களை டீசர் தகவல் வெளியிட்டுள்ளது. ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனானது ரியல்மி 9 தொடரின் ஒரு சாதனமாக இருக்கும் என டுவிட்டர் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது.

ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ சாதனங்கள்
ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ சாதனங்கள் பிஐஎஸ் போன்ற சான்றிதழ் தரவுத்தளங்களில் காணப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 மற்றும் டைமன்சிட்டி 920 செயலி இடம்பெறும் எனவும் இந்த தொடரில் ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஆகிய சாதனங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் சாதனத்தின் ரெண்டர் மற்றும் விவரக்குறிப்புகளை ஆன்லீக்ஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்த கசிவுத் தகவலை ஸ்மார்ட்பிக்ஸ் நிறுவனமும் பகிர்ந்திருக்கிறது. ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் சாதனம் சாய்வு பின்புற பேனல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 9 தொடரின் மிக உயர்ந்த மாறுபாடு
ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனானது ரியல்மி 9 தொடரின் மிக உயர்ந்த மாறுபாடாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்பு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. குவாட் கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில், இது 50 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா, 2 எம்பி நான்காவது நிலை கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனில் செல்பி வசதிக்கு என 16 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹோல் பஞ்ச் வடிவமைப்போடு இந்த சாதனம் வரும் என கூறப்படுகிறது. சிக்யூசி தரவுத்தள தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தின் அறிமுகம் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டாலும் இதன் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086