Home
News

இது வேறலெவல் எடிஷன்: குறிப்பிட்ட அளவே விற்பனை- விரைவில் அறிமுகமாகும் ரியல்மி 9 ப்ரோ+ ஃப்ரீ ஃபயர் எடிஷன்!

ரியல்மி 9 ப்ரோ+ ஃப்ரீ ஃபயர் எடிஷன் விரைவில் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் இந்த சாதனம் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

ரியல்மி 9 ப்ரோ+ ஃப்ரீ ஃபயர் எடிஷன்

ரியல்மி 9 ப்ரோ+ ஃப்ரீ ஃபயர் எடிஷன்

ரியல்மி 9 ப்ரோ+ ஃப்ரீ ஃபயர் எடிஷன் விரைவில் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் இந்த சாதனம் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறைந்த அளவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போனானது ரியல்மி 9 ப்ரோ + வேரியண்ட்டின் கூடுதல் பதிப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

விரைவில் உலகளவில் ஃப்ரீ ஃபயர் பதிப்பு

விரைவில் உலகளவில் ஃப்ரீ ஃபயர் பதிப்பு

ரியல்மி 9 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது விரைவில் உலகளவில் ஃப்ரீ ஃபயர் வரையறுக்கப்பட்ட பதிப்பு மாடலைக் கொண்டு வரும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் டீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ரியல்மி க்ளோபல் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த போன் குறித்து டீஸ் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 9 ப்ரோ+ ஃப்ரீ ஃபயர் பதிப்பானது குறைந்த அளவில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறைந்த அளவுகளில் மட்டுமே விற்பனை

தற்போது வரை ரியல்மி 9 ப்ரோ+ ஃப்ரீ ஃபயர் பதிப்பு குறைந்த அளவுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற தகவல் கிடைத்தாலும், தற்போது வரை ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை, இந்த சாதனமானது கேமிங்-ல் இருந்து உத்வேகம் பெறும் பேனல் டிசைனை கொண்டிருக்கும் எனவும் முன்னதாகவே நிறுவப்பட்ட தீம் மற்றும் நீட்டிக்கப்பட்ட தொகுப்பை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஃப்ரீ ஃபயர் ஒரு ராயல் மல்டிபிளேயர் கேம் ஆகும் இது பல்வேறு பகுதிகளிலும் மிகவும் பிரபலமடைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டு தற்போது இந்தியாவில் மட்டும் தடை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது வரை இந்த ஸ்மார்ட்போனின் பிராண்ட் விவரங்கள் மட்டுமே டீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் குறித்த அதிக விவரங்கள் வெளியிடவில்லை.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

ரியல்மி 9 ப்ரோ + ஃப்ரீ ஃபயர் எடிஷன் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 9 ப்ரோ+ போன்ற விவரக்குறிப்புகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 9 ப்ரோ + 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் ரூ.24,999-க்கு கிடைக்கும், அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.26,999 ஆகவும் அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.28,999 ஆகவும் இருக்கிறது. ரியல்மி 9 ப்ரோ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி பேனலைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனம் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

ரியல்மி 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கிறது. ரியல்மி யூஐ 3.0 உடன் ஆண்ட்ராய்ட் 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ்-ல் இயங்குகிறது.

Best Mobiles in India

English summary
Realme 9 pro+ Free Fire Edition Might be Launching Soon Globally: Official Teased
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X