Home
News

கொட்டுது ஆர்டர்.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையில் (Realme Festive Days Sale) ரியல்மி சி53 (Realme C53), ரியல்மி சி51 (Realme C51) மற்றும் ரியல்மி என்53 (Realme N53) ஆகிய போன்களுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் இதோ.

ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த போன் 6.74 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 (Octa-Core UNISOC T612) சிப்செட் வருகிறது.

இந்ச போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 4 ஜிபி மாடலில் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது. 2 டிபிக்கான மெமரி கார்டு சப்போர்ட் உள்ளது.

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதன் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, டிஸ்கவுண்ட் போக ரூ.9,499 தொடக்க விலையில் கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ என்53 அம்சங்கள் (Realme N53 Specifications): இந்த போனில் 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் சிப்செட் வருகிறது. மாலி - ஜி 57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு இருக்கிறது.

இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. அதோடு 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொண்டுள்ளது. அதேபோல 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலும் வருகிறது. 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த போனின் 4 ஜிபி மாடலின் விலை ரூ.8,999ஆகவும் 6 ஜிபி மாடலின் விலை ரூ.10,999ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, டிஸ்கவுண்ட் போக ரூ.7,999 தொடக்க விலையில் கிடைக்கிறது.

ரியல்மி சி51 அம்சங்கள் (Realme C51 Specifications): இந்த போனில் 6.7 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 2TB மெமரி..  5000mAh பேட்டரி!

ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.

33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் விலை ரூ.8,999ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையில் 4 ஜிபி ரேம் மாடல் வெறும் ரூ.7,999க்கு கிடைக்கிறது. இந்த போன்களை ரியல்மி இந்தியா (Realme India) வெப்சைட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கார்டுகளுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 53, C51 And N53 Under Rs 10000 With Offer in Realme Festive Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X