எல்லாமே டால்பி ஆதரவு: வீடு தியேட்டர் மாதிரி இருக்கும்- மலிவு விலையில் ரியல்மி 4கே ஸ்மார்ட்டிவிகள்!

|

டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் அமைப்போடு ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் வகையில் 4கே ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்

டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ்

டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் வகையில் 4கே ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது 43 இன்ச் மற்றும் 50 என்ற இரண்டு அளவுகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் எச்டிஎம்ஐ யூஎஸ்பி போர்ட்கள், வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது. இந்தியாவில் ரியல்மி நிறுவனம் 4 கே ஸ்மார்ட்டிவிகளின் 43 இன்ச் வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆகவும் 50 இன்ச் அளவு வேரியண்ட் விலை ரூ.39,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் டிவி ஆனது பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் முக்கிய ஆஃப்லைன் கடைகளில் ஜூன் 12 மதியம் 12 மணிமுதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஸ்மார்ட் டிவி 4 கே அம்சங்கள்

ரியல்மி ஸ்மார்ட் டிவி 4 கே அம்சங்கள்

ரியல்மி ஸ்மார்ட் டிவி 4 கே அம்சங்கள் குறித்து பார்க்கையில், ரியல்மி ஸ்மார்ட் டிவியானது ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையோடு வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது 43 இன்ச் மற்றும் 50 இன்ச் என்ற இரண்டு அளவுகளில் வருகிறது. இரண்டு டிஸ்ப்ளேக்களும் 3,840x2,160 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இது 178 டிகிர டிஸ்ப்ளே கோணத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது குவாட் கோர் மீடியாடெக் எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 2 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. இதில் 16 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. மேலும் ரியல்மி ஸ்மார்ட்டிவியானது நான்கு ஸ்பீக்கர் ஆதரவோடு வருகிறது. மேலும் இது 24 வாட்ஸ் வெளியீட்டு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது டால்பி அட்மோஸ் ஆதரவு, டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியில் மைக்ரோஃபோன்கள் ஆதரவு உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்டிவியில் கூகுள் அசிஸ்டெண்ட் ஆதரவும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் கட்டுப்பாடும் இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப்

அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப்

அதேபோல் இந்த ரியல்மி ஸ்மார்ட்டிவியில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு இணைப்பு பயன்பாடுகள் உள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியில் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆதரவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்டிவியில் உள்ளமைக்கப்பட்ட க்ரோம் கேஸ்ட் ஆதரவும் இருக்கிறது. ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது வைஃபை, ப்ளூடூத் வி5.0, இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், எச்டிஎம்ஐ ஆர்சி போர்ட் ஆதரவுகளும் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்டிவியில் ஏவி இணைப்பு, ஆப்டிக்கல் ஆடியோ அவுட் போர்ட் ஆதரவும் உள்ளது.

ப்ளூடூத் இணைக்கப்பட்ட ரிமோட்

ப்ளூடூத் இணைக்கப்பட்ட ரிமோட்

அதேபோல் ரியல்மி 4கே ஸ்மார்ட்டிவியில் ப்ளூடூத் இணைக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறது. ஸ்மார்ட்டிவிக்கு எந்த திசையில் வைத்து ரிமோட்டை பயன்படுத்தினாலும் இது செயல்படும். இந்த ஸ்மார்ட்டிவி ஆனது அமேசான் பிரைம் வீடியோ, கூகுள் அசிஸ்டெண்ட், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப் அணுகல் ஆதரவைக் கொண்டுள்ளது. 960 x 563 x 76 மிமீ ஸ்டாண்ட் இல்லாமல், 6.5 கிலோ எடை ஆதரவோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme 4K Smart TV Launched with Dolby Vision, Dolby Atmos and More: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X