Home
News

4 நிமிடம் 30 வினாடியில் 100% முழு சார்ஜ்.. உலகத்தின் அதிவேகமான பாஸ்ட் சார்ஜிங் இதான்.. எந்த போன்ல வருது?

ஆஹா.. ஓஹோ.. என்று உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு நீங்கள் கனவில் கூட நினைத்து வர்த்திடாத புதிய அதிவேக சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (Supersonic fast charging technology) ரியல்மி (Realme) நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதுவரை உலகளவில் இத்தகைய சூப்பர்பாஸ்ட் சார்ஜிங் வேகத்தை எந்தவொரு மொபைல் நிறுவனமும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரியல்மி நிறுவனம் உலகத்தின் முதல் 320W சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (Realme 320W Supersonic Fast Charging Technology) அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய 320W சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (Realme 320W Supersonic Fast Charging Technology) பயன்படுத்தி, ரியல்மி நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போன் சாதனத்தை வெறும் 4 நிமிடம் 30 வினாடிகளில் முழுமையாக 100% சார்ஜ் செய்து சாதனை படைத்துள்ளது. ஆம் மக்களே சரியாக தான் படித்தீர்கள். வெறும் 4 நிமிடம் 30 விந்தைகளில், ரியல்மி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் சாதனத்தை 100% வரை சார்ஜ் செய்துள்ளது.

4 நிமிடம் 30 வினாடியில் 100% முழு சார்ஜ்.. உலகத்தின் வேகமான சார்ஜிங்..

ரியல்மி 320W சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (Realme 320W Supersonic Fast Charging Technology):

இந்த புதிய 320W சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (Realme 320W Supersonic Fast Charging Technology) ரியல்மி நிறுவனம் சமீபத்தில் சீனாவில் நடத்திய 828 பேன் பெஸ்டிவல் (828 Fan Festival) நிகழ்வில் அறிமுகம் செய்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில், ரியல்மி நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்களை பற்றி உலகிற்கு இந்நிகழ்வு மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் புதிய 320W சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை நிறுவனம் டெமோ செய்து காண்பித்துள்ளது. அதில் ரியல்மி நிறுவனம் 4420mAh பேட்டரி திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரியை வெறும் 4 நிமிடம் 30 விண்டிகளில் முழுமையாக 100% வரை சார்ஜ் செய்து நேரடியாக காண்பித்துள்ளது. இந்த அதிவேக சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை நிறுவனம் 4 மினிட் மிராக்கிள் (4 minute miracle) என்று புகழாரம் சூட்டியுள்ளது.

இந்த புதிய 320W சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரியல்மி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனை வெறும் 1 நிமிடத்தில் 26% வரை சார்ஜ் செய்து காண்பித்துள்ளது. வெறும் 60 நொடியில் 26% சார்ஜ் என்பது ஒரு அபாரமான வேகமாகும். அதேபோல், இந்த சார்ஜர் தொழில்நுட்பம் 2 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் 50% வரை சார்ஜ் செய்து காண்பித்துள்ளது.

உலகத்தின் முதல் போல்டபில் பேட்டரி மற்றும் அட்வான்ஸ்டு சேஃப்டி சொலுஷன் (World's First Folded Battery and Advanced Safety Solutions):

இந்த புதிய 320W சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் இனி உலக மக்கள் அவர்களின் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வெறும் 4 நிமிடங்கள் மட்டும் செலவழித்தால் போதும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது. இதன் மூலம் இனி ரியல்மி ஸ்மார்ட்போன் பயனர்கள் நீண்ட நேரம் சார்ஜருடன் இணைந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் எந்த மாடலில் முதலில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை ரியல்மி மர்மமாக வைத்துள்ளது. இத்துடன் ரியல்மி நிறுவனம் உலகத்தின் முதல் போல்டபில் பேட்டரி மற்றும் அட்வான்ஸ்டு சேஃப்டி சொலுஷன் (World's First Folded Battery and Advanced Safety Solutions) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. கூடுதலாக, நிறுவனம் உலகத்தின் முதல் ஏர்கேப் வோல்ட்டேஜ் ட்ரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்படம் மற்றும் உலகத்தின் முதல் பாக்கெட் கேனான் சார்ஜ்ர் போன்றவற்றையும் அறிமுகம் செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme 320W SuperSonic Fast Charging Technology Charges Mobile To 100 Percentage In 4 Min 30 Seconds
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X