ஆகஸ்ட் 29 நாள் குறிச்சாச்சு.. கெத்தா பட்ஜெட்ல வெளிவரும் Realme 13.. விலை என்ன? என்ன அம்சம்?
ரியல்மி (Realme) நிறுவனம் விரைவில் ஒரு புதிய ரியல்மி சீரிஸ் சாதனத்தை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய சீரிஸ் ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் ரியல்மி 13 சீரிஸ் என்ற மாடல் பெயருடன் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ரியல்மி 13 சீரிஸ் 5ஜி (Realme 13 Series 5G) போன்கள் வரும் ஆகஸ்ட் 29, 2024 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன் சீரிஸ் எத்தனை போன்கள் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் போனின் சிறப்பம்சம் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி நிறுவனம் வரும் இந்திய சந்தையில் ரியல்மி 13 சீரிஸ் 5ஜி (Realme 13 Series 5G) ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் ஆகஸ்ட் 29, 2024 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்த புதிய ரியல்மி 13 சீரிஸ் 5ஜி (Realme 13 Series 5G) ஸ்மார்ட்போன் மாடல்கள் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 29 நாள் குறிச்சாச்சு.. கெத்தா பட்ஜெட்ல வெளிவரும் ரியல்மி 13 சீரிஸ் 5ஜி (Realme 13 Series 5G):
இந்த புதிய சிப்செட் உடன் வெளிவரும் ஸ்மார்ட்போன் சாதனம் மிகவும் அற்புதமான அம்சங்களுடன் பேக் செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் வேகம் மற்றும் திறன் தற்போது சந்தையில் விற்பனையாகும் ஸ்மார்ட்போனின் திறன்களை விட அதிகமாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூறும் அளவிற்கு, இந்த புதிய மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் 4nm பிராசஸர் டெக்னாலஜி உடன் வருகிறது.
இது 30% உயர்ந்த செயல்திறன் உடன் வெளிவரும் என்று ரியல்மி நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இந்த ரியல்மி 13 சீரிஸ் 5ஜி (Realme 13 Series 5G) ஸ்மார்ட்போன் 750,000 AnTuTu பெஞ்ச்மார்க் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. ரியல்மி 13 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் க்ரீன் மற்றும் கோல்டன் கலர் நிறங்களில் டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி 13 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் சிப்செட் முற்றிலுமாக அப்கிரேட் சிப்செட் உடன் வருகிறது. இது ரியல்மி 12+ 5ஜி போனில் வழங்கப்பட்ட டைமென்சிட்டி 7050 சிப்செட்டை மேம்படுத்தி டைமென்சிட்டி 7300 சிப்செட் உடன் வருகிறது. இந்த புதிய சிப்செட் உடன் புதிய ரியல்மி 13 சீரிஸ் 5ஜி (Realme 13 Series 5G) ஸ்மார்ட்போன் பட்ஜெட் சாதனமாக வெளிவருகிறது.
ரியல்மி 13 சீரிஸ் 5ஜி விலை என்ன? (Realme 13 Series 5G Price):
ரியல்மி 13 சீரிஸ் 5ஜி (Realme 13 Series 5G) ஸ்மார்ட்போன் சாதனம் ரியல்மி நிறுவனத்தின் realme.com மற்றும் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 23,999 விலை முதல் ரூ. 30,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் ரியல்மி 12 5ஜி இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications








