Home
News

Realme 12 Pro: என்னடா இது உள்ள இருக்க எல்லாமே தெரியுது.. கண்ணாடி போன்ற தோற்றத்தில் கலக்கும் புது போன்..

ஸ்மார்ட்போன் உலகில் தனக்கெனத்தனி இடத்தை பிடித்துள்ள ரியல்மி (Realme), தனது ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சென்ற வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல்கள் சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்ற வாரம் ரியல்மி இந்தியாவில் அறிமுகம் செய்த ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் ரூ. 30,000 ரேஞ்சில் வரும் ஸ்மார்ட்போன்களில் விரைவில் விற்பனை செய்யப்பட்டது என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில், ரியல்மி ஐரோப்பாவின் CEO ஃப்ரான்சிஸ் வாங் (Francis Wang) தனது எக்ஸ் (X) பக்கத்தில் டிரான்ஸ்பெரன்ட் பேனல் (Transparent panel) கொண்ட புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை பகிர்ந்துள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Realme 12 Pro: என்னடா இது உள்ள இருக்க எல்லாமே தெரியுது..

பெயர் வெளியிடப்படாத இந்த ஸ்மார்ட்போனின் தோற்றத்தை வைத்து இது ரியல்மி 12 ப்ரோ+ (Realme 12 Pro+) மாடலாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ரியல்மி 12 ப்ரோ+ மாடலில் இருப்பது போலவே பெரிஸ்கோப் லென்ஸுடன் (Periscope Lens) சேர்த்து மூன்று சென்சார்கள் கோல்ட் பார்டர் கொண்ட வட்டமான கேமரா மாடியூலில் (Module) பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா ப்லேஸ்மென்ட்டும் ரியல்மி 12 ப்ரோ போலவே இருப்பதால் இந்த புதிய ஸ்மார்ட்போன் (Smartphone) அந்த சீரிஸின் புதிய வேரியண்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஃப்ரான்சிஸ் வாங் தனது எக்ஸ் பக்கத்தில் ரியல்மி ஸ்மார்ட்போன் ஒன்றை தனது கைகளில் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன் ப்ளாக் ட்ராஸ்பெரன்ட் பின்பக்க பேனலை கொண்டுள்ளது.

கேமரா மாடியூல் (camera module) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ட்ராஸ்பேரன்ட் பேனலால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் இந்த ரியல்மி 12 ப்ரோ+ ஸ்மார்ட்போன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேமரா பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் சாதாரண பேனலால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரியல்மி 12 ப்ரோ+ வேரியண்ட் குறிப்பிட்ட அளவில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஃப்ரான்சிஸ் வாங் அவரது பதிவில் இந்த புதிய ஸ்மார்ட்போனை எங்கே லான்ச் செய்யலாம் என்று மக்களிலிடம் கேட்டுள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகம் இந்த மாதம் இருக்கும் என்பதால் பெரும்பாலும் சீன சந்தையில் இது அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இந்த ரியல்மி 12 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவல்களைப் பற்றி பார்க்கலாம். டிஸ்ப்ளேவைப் பொருத்தவரை இந்த ரியல்மி 12 ப்ரோ+ ஸ்மார்ட்போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate) கொண்ட 6.67" இன்ச் FHD+ கர்வ்ட் OLED டிஸ்பிளேவுடன் வருகிறது. ஸ்னாப்ட்ராகன் 7s ஜென் 2 சிப்செட் உடன் (Snapdragon 7s Gen SoC) இயங்கும் இந்த ஸ்மார்ட்போனானது 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கேமரா அம்சத்தை பொருத்தவரை 50MP ப்ரைமரி கேமரா (Primary camera), 64MP பெரிஸ்கோபிக் லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் யூனிட் (Ultra wide angle unit) ஆகியவை பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. நேவிகேட்டர் பெய்ஜ் (Navigator Beige) மற்றும் சப்மெரைன் ப்ளூ (Submarine Blue) என்று இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வரும் இந்த 12 ப்ரோ+ ஸ்மார்ட்போனுடன் 67W சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியும் வருகிறது.

இதன் டிரான்ஸ்பரென்ட் தோற்றம் இப்போது அப்படியே நத்திங் போன் சாதனம் போல இருப்பதினால், ஸ்மார்ட்போன் ரசிகர்கள் மத்தியில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 12 Pro+ Spotted With Transparent Back Panel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X