Home
News

ஒட்டுமொத்த Phone-களையும் பேக்கில் ஓடவிடப்போகும் Realme 11 Pro+ 5G! 200MP காமெராவுடன் இது வேற லெவல் போன்ங்க!

ரியல்மி நிறுவனம் உலக மக்களின் கவனத்தை இப்போது, ஒரே ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலின் டிசைன் மூலம் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆம், ரியல்மி அடுத்தபடியாக அறிமுகம் செய்யவிருக்கும் புதிய Realme 11 Pro+ 5G பற்றிய டீசர்கள் வெளியாகியுள்ளது.

Realme 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற மே மாதம் 10 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகமாகவுள்ளது. இந்தத் தொடரில் வெண்ணிலா Realme 11, Realme 11 Pro மற்றும் Realme 11 Pro+ 5G என்று மூன்று சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த பிராண்ட் Realme 11 Pro+ 5G ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது.

ஒட்டுமொத்த Phone-களையும் பேக்கில் ஓடவிடப்போகும் Realme 11 Pro+ 5G!

Realme , இன்று முன்னதாக, வரவிருக்கும் Realme 11 Pro+ 5G ஸ்மார்ட்போனுக்கான விளம்பர போஸ்டர்கள் மற்றும் விளம்பர வீடியோவைப் அதன் அதிகாரப்பூர்வ சேனல் வழியாக பகிர்ந்துள்ளது. இது Realme 11 Pro+ 5G சாதனம் எப்படி இருக்கும் என்பதற்கான தகவல்களை நமக்கு அளித்துள்ளளது. ரியல்மி வெளியிட்ட விளம்பர போஸ்டர் தகவல் படி, Realme 11 Pro+ 5G இந்த டிசைனில் தான் இருக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்திவிட்டது.

இந்த சாதனம் ஒரு ரிங் வடிவ கேமரா அமைப்பை கொண்டுள்ளது என்பதை விளம்பர வீடியோ மற்றும் போஸ்டர் தெளிவாக காண்பிக்கிறது. இந்த ரிங் வடிவ கேமரா அமைப்பு மூன்று கேமராக்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். Realme 11 Pro+ 5G ஆனது OIS-க்கான ஆதரவுடன் 200MP கொண்ட பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கும் என்பதையும் கேமரா ரிங் தகவல் உறுதிப்படுத்துகிறது.

இந்த Realme 11 Pro+ 5G ஸ்மார்ட்போனின் பேக் பேனல் லெதர் போன்ற பூச்சுகளை வெளிப்படுத்துகிறது. இதில் சில வெளிப்படையான தையல் கோடுகள் கேமரா தொகுதியைச் சுற்றிலும் பதிக்கப்பட்டுள்ளது. சாதனத்தின் வலது பக்கத்தில், வால்யூம் அப் மற்றும் டவுன் பட்டன்கள் மற்றும் பவர் பட்டன் அமைக்கப்பட்டுள்ளது. மேலே, ஒரு மைக்ரோஃபோன் இருக்கும் மற்றும் அதன் அருகில் ஒரு ஐஆர் பிளாஸ்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த Phone-களையும் பேக்கில் ஓடவிடப்போகும் Realme 11 Pro+ 5G!

இந்த ஸ்மார்ட்போனி சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இதன் டிஸ்பிளே முன்புறம் வளைந்த பேனலுக்கு இடமளிக்கும். இது AMOLED டிஸ்ப்ளேவாக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். Realme 11 Pro+ 5G ஆனது 6.7' இன்ச் கொண்ட FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன், 120Hz ரெஃப்ரஷ் ரேட், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் கர்வுடு டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த Realme 11 Pro+ 5G சாதனம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7000 சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 12GB ரேம் மற்றும் 1TB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸில் இயங்கும். 200MP + 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் மற்றும் மேக்ரோ கேமராவுடன் இருக்கும்.

முன்பக்கத்தில், சாதனம் 16MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டிருக்கும். பேட்டரி பற்றி பேசுகையில் இது Realme 11 Pro+ 5G ஆனது USB Type-C சார்ஜிங் போர்ட் மூலம் 100W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இதன் விலை இந்திய மதிப்பு படி, தோராயமாக ரூ.60,000 முதல் ரூ.70,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 11 Pro+ 5G Smartphone Teased With 200MP Camera and Curved AMOLED Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X