Home
News

வெயிட் செஞ்சது போதும் உடனே ஆர்டர் பண்ணுங்க! Realme 11 Pro 5G வாங்க சரியான நேரம் இதான்!

ரியல்மி (Realme) நிறுவனம் சமீபத்தில் ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) தொடர் ஸ்மார்ட்போன்களை ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக உறுதிப்படுத்தியது. டிப்ஸ்டர் சுதன்ஷு சமீபத்தில் முன்கூட்டிய ஆர்டர் தேதி மற்றும் EMI சலுகைகளை பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.

ரியல்மி 11 ப்ரோ 5ஜி ஆரம்ப அணுகல் விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இலவசமாக நிறுவனம் வழங்கவுள்ளதாகவும் டிப்ஸ்டர் வெளிப்படுத்தியுள்ளார். Realme அதிகாரப்பூர்வமாக ஆரம்ப அணுகல் விற்பனை தேதி மற்றும் சலுகைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. சீன OEM ஆனது ஜூன் 8 அன்று Realme 11 Pro 5G மற்றும் 11 Pro + 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும்.

வெயிட் செஞ்சது போதும் உடனே ஆர்டர் பண்ணுங்க! Realme 11 Pro 5G வாங்கலாம்

சீன மற்றும் உலகளாவிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இடையே எந்த வித்தியாசமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. Realme இன் சமீபத்திய ட்வீட், சாதனத்தின் ஆரம்ப அணுகல் விற்பனை வெளியீடு முடிந்தவுடன் விரைவில் நடைபெறும் என்பதை வெளிப்படுத்துகிறது. சாதனங்களின் விவரக்குறிப்புகள் மற்றும் விலையைப் பார்த்த பிறகு, ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது உதவுகிறது.

ஆரம்ப அணுகல் விற்பனை ஜூன் 8 அன்று இரவு 8 மணி முதல் இரண்டு மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் HDFC வங்கி மற்றும் SBI வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி 1,500 ரூபாய் உடனடி தள்ளுபடியைப் பெறலாம். டெபிட் கார்டுகளுக்கு சலுகை பொருந்துமா என்பதை Realme வெளியிடவில்லை. இந்த குறிப்பிட்ட வங்கிகளில் கார்டுகள் இல்லாதவர்களுக்கு Realme ரூ.1,500 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியையும் வழங்குகிறது.

ஸ்மார்ட்போனின் முன்கூட்டிய ஆர்டர் ஜூன் 9 ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கும். முன்னதாக, முன்கூட்டிய ஆர்டர்கள் ஜூன் 14 வரை நீடிக்கும் என்று ஒரு டிப்ஸ்டர் வெளிப்படுத்தியிருந்தார். நிறுவனம் ரூ.4,499 மதிப்புள்ள Realme Watch 2 Pro ஐ இலவசமாக வழங்கும் என்றும் டிப்ஸ்டர் தெரிவிக்கிறார். முன்னணி வங்கிகளுடன் நோ-காஸ்ட் EMI ஐ வெளிப்படுத்தும் படத்தையும் டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார்.

வெயிட் செஞ்சது போதும் உடனே ஆர்டர் பண்ணுங்க! Realme 11 Pro 5G வாங்கலாம்

ரியல்மி 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் கர்வுடு AMOLED டிஸ்ப்ளேவை, முழு HD+ தெளிவுத்திறன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் 950 nits பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது மீடியாடெக் டிமென்சிட்டி 7050 சிப்செட். 2.6GHz+ 6 × கோர்ட்டெக்ஸ் A78 உடன் 2.0GHz ஆர்ம் மாலி G68 MC4 உடன் வருகிறது. ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், 8ஜிபி ரேம்/12ஜிபி LPDDR5X ரேம் உடன் 128ஜிபி, 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

இது Android 13, Realme UI 4.0 2 OS உடன் வரும். இது OIS உடன் 200MP சாம்சங் ISOCELL HP3 சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் (11 Pro +) OIS உடன் 100MP சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் (11 Pro) உடன் வருகிறது. முன்பக்கத்தில் 32MP சென்சார் (11 Pro +) மற்றும் 6MP கேமரா (11 Pro). 5000 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் (11 Pro +), 67W பாஸ்ட் சார்ஜிங் (11 Pro) USB 2.0 Type-C போர்ட் உடன் வருகிறது.

இது Wi-Fi 802.11 a/b/g/n/ac/6, டூயல்-பேண்ட் புளூடூத் 5.2, A2DP, LE, aptX HD, GPS, GALILEO, GLONASS, BDS, QZSS, NFC போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. டால்பி அட்மாஸுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3.5மிமீ ஜாக், இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது. இது பிளாக், க்ரீன் மற்றும் கோல்டு நிறங்களில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 11 Pro 5G Series Early Access Sale on June 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X