புது போன் எதுவும் வாங்கிடாதீங்க மக்களே! Realme-ன் மாஸ்டர் பீஸ் இந்தியாவுக்கு வருது! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!
ரியல்மி (Realme) நிறுவனத்துடைய மாஸ்டர் பீஸ், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro+ 5G) விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ரியல்மி வரிசையில், ஒரு சூப்பர் ஸ்மார்ட்போனாக வெளிவரப் போகிறது இந்த மாடல்.
ரியல்மி நிறுவனம் அதனுடைய Realme 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் மே 10 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது இன்னும் 2 நாட்களில் இந்த சாதனம் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. அதனை தொடர்ந்து, கூடுதலாக, இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்பதை பிராண்ட் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Realme 11 Pro+ 5G ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் பற்றி பேசுகையில், முந்தைய லீக் தகவல்கள் படி, இந்த ஸ்மார்ட்போன் இந்த மே மாதத்திலேயே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறுகின்றது. அறிமுகத்திற்கு முன்னதாக, Realme 11 Pro+ 5G பற்றிய தகவல்கள் அதிகமாக லீக் ஆக துவங்கியுள்ளன. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி இன் சில விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதற்கான சில குறிப்புகளும் லீக் ஆகியுள்ளது.
Realme 11 Pro+ 5G என்ற இந்த மாஸ்டர் பீஸ் சாதனம், சமீபத்தில் இந்திய BIS சான்றிதழ் மற்றும் தாய்லாந்து NBTC சான்றிதழ் தளங்களில் காணப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதற்கான பொருள், இந்த சாதனங்கள் இந்தியா மற்றும் தாய்லாந்தில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை குறிக்கிறது. இதற்கு மத்தியில், Realme நிறுவனம் இன்று இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ்ஜிங் திறன்களை பற்றி டீஸ் செய்துள்ளது.
ரியல்மி வெளியிட்டுள்ள டீஸரின் படி, இந்த Realme 11 Pro+ 5G சாதனம் 5000mah கொண்ட பெரிய பேட்டரி உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை பெரும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இந்த சாதனம் 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட 6.7' இன்ச் FHD+ கர்வுடு (வளைந்த) AMOLED டிஸ்ப்ளேவை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ரியல்மி 11 ப்ரோ+ 5ஜி சாதனம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் மூலம் இயக்கப்படும். இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை கொண்ட ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme 11 Pro+ 5G ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான RealmeUI 4.0 இல் இயக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரியல்மி 11 ப்ரோ+ 5ஜி சாதனம் OS ஆதரவுடன் 200MP பிரைமரி ரியர் கேமராவைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், சாதனம் 16MP செல்ஃபி ஸ்னாப்பரைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, இது 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mah பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








