5G போன் வாங்குறவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! கம்மி விலையில Realme 10 5G வருது.!
Realme நிறுவனம் நேற்று அதன் புதிய Realme 10 4G ஸ்மார்ட்போன் மாடலை உலகளவில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, அடுத்தபடியாக நிறுவனம் Realme 10 5G மற்றும் Realme 10 Pro 5G போன்ற அடுத்த ஜெனெரேஷன் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் பட்ஜெட் விலையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போனாக Realme 10 5G இருக்கிறது.

Realme 10 5G அறிமுகத்திற்கு ரெடி.!
Realme 10 5G ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக, இந்த ஸ்மார்ட்போனின் முழு விபரங்களையும் ஒரு சீன டெலிகாம் வலைத்தளம் தெளிவாக வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டது. Realme 10 4G ஐ உலகளவில் புதன்கிழமை அறிமுகப்படுத்திய பிறகு, Realme 10 தொடரை சீனாவில் அறிமுகப்படுத்த Realme தயாராகி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது.

இந்த வரிசையில் இன்னும் எத்தனை மாடல் அறிமுகமாகிறது?
இந்த வரிசையில் Realme 10 5G , Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro+ 5G ஆகியவை விரைவில் அறிமுகமாகவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, Realme 10 5G மற்றும் Realme 10 Pro ஆகியவை சீனா டெலிகாம் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இது அவற்றின் வடிவமைப்பு மற்றும் முக்கிய சிறப்பம்ச தகவலை வெளிப்படுத்துகிறது.

கம்மி விலை 5G ஸ்மார்ட்போனா இந்த Realme 10 5G?
இந்த பதிவில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பட்ஜெட் விலை Realme 10 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கப்போகிறோம். வாங்க நேரடியாக முதலில் Realme 10 5G போனின் ஸ்பெக்ஸ் விபரங்களைப் பார்த்துவிடலாம். Realme 10 5G ஸ்மார்ட்போன் இந்த புகைப்படங்களில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் தான் இருக்கும்.

Realme 10 5G டிஸ்பிளே மற்றும் சிறப்பம்சம்
Realme 10 5G சாதனம் ரியல்மி பிராண்டின் நுழைவு-நிலை 5G ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உடன், 6.58-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது பெரும்பாலும் IPS LCD பேனலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹூட்டின் கீழ், Realme 10 5G ஆனது MediaTek Dimensity 700 செயலியுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

Realme 10 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்
Realme 10 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 50MP + 2MP + 2MP கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உடன் வெளிவரும். Realme 10 5G ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், 8MP செல்ஃபி ஸ்னாப்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். Realme 10 5G ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் பற்றிப் பார்க்கையில், இது 8GB ரேம் மற்றும் உடன் 128GB / 256GB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும்.

Realme 10 5G இன் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் அம்சம்
Realme 10 5G ஸ்மார்ட்போனின் பேட்டரியைப் பொறுத்தவரை, இந்த பட்ஜெட் விலை கொண்ட 5G ஸ்மார்ட்போன் ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000 mAh பேட்டரியை பேக் செய்து வெளிவரும் என்று வலைப்பக்க தகவல் குறிப்பிடுகிறது. கடைசியாக, Realme 10 5G இன் விலை பற்றிப் பார்த்துவிடலாம். இந்தியர்கள் பலர் இந்த போனை எதிர்பார்த்துக் காத்திருக்க ஒரு முக்கிய காரணமே இதன் விலை தான்.
படத்தில் இருப்பது Realme 10 Pro+ மாடலாகும்.

Realme 10 5G போனின் விலை என்ன? இந்தியாவின் கம்மி விலை 5ஜி போன் எது?
Realme 10 5G ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் மாடலின் விலை CNY 1,599 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது தோராயமாக சுமார் ரூ. 18,000 என்ற விலையை நெருங்குகிறது. இந்த விலை நேரடியாக சீன வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை விடக் குறைந்த விலையில் இப்போது இந்தியாவில் Lava Blaze 5G ஸ்மார்ட்போன் வெறும் ரூ.10,000 விலையில் வாங்கக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications