சொல்லிட்டாங்க.. இது தான் விலை.! Realme 10 4G அறிமுகத்திற்கு ரெடி.! வாங்க நீங்க ரெடியா?

|

Realme நிறுவனம் Realme 10 சீரிஸை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது என்ற செய்தியை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.

ரியல்மி நிறுவனம், வெளியீட்டு தேதியை வெளியிடாமல், Realme 10 தொடர் வெளியீட்டு நிகழ்வு நவம்பரில் நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. Realme 10 4G மற்றும் 5G, Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro+ 5G உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களை நிறுவனம் இந்த வரிசையில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

Realme 10 4G இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Realme 10 4G இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்த சாதனங்கள் நவம்பர் 5 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்திய லீக் தகவல் தெரிவிக்கிறது.

அதேபோல், நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இந்தியாவில் இதன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கும் போது, ​​ஒரு புதிய லீக் Realme 10 4G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை லீக் செய்துள்ளது.

Realme 10 4G ஸ்மார்ட்போனில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

Realme 10 4G ஸ்மார்ட்போனில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

புதிய Realme 10 4G ஆனது நவம்பர் 2022 இல் வரவிருக்கும் எண் சீரிஸ்களில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் முதல் தொகுப்பாக இருக்கும்.

ரியல்மி நிறுவனம் வெளியீட்டை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் லீக் தகவல்களின் குறிப்பு படி, இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியால்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என்பதைப் பரிந்துரைக்கிறது.

இவை இரண்டும் 5ஜி மாடல்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.74,999 போனை வெறும் ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!ரூ.74,999 போனை வெறும் ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!

Realme 10 4G டிஸ்பிளே விபரம்

Realme 10 4G டிஸ்பிளே விபரம்

ரியல்மி 10 தொடரில் வரவிருக்கும் Realme 10 4G ஸ்மார்ட்போன் 180Hz டச் சாம்பிளிங் மாதிரி விகிதத்துடன் 6.5' இன்ச் முழு HD+ IPS LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று டிப்ஸ்டர் பராஸ் குக்லானி கூறுகிறார்.

இந்த டிஸ்பிளே 60Hz அல்லது 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வரும் என்று கூறப்படுகிறது. ஆனால், துல்லியமான ரெப்ரெஷ் ரேட் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஸ்கிராட்ச் மற்றும் டிராப்ஸ் சேதத்திற்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பை வழங்க டிஸ்பிளே பாண்டா கிளாஸ் அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் கேமரா விபரம்

புதிய ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் கேமரா விபரம்

இந்த புதிய ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 99 சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 50MP பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் வரும். இந்த சாதனம் 16MP முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கிறது.

இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று குக்லானி தெரிவித்திருக்கிறார்.

Realme 10 4G டிவைஸின் சரியான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்கள் இன்னும் தெரியவில்லை.

வீடியோ கால் வர சொன்னாங்க.! டக்குனு அந்த பொண்ணு ரெக்கார்ட் செஞ்சுட்டு.! உஷார் மக்களே.!வீடியோ கால் வர சொன்னாங்க.! டக்குனு அந்த பொண்ணு ரெக்கார்ட் செஞ்சுட்டு.! உஷார் மக்களே.!

ரியல்மி 10 4ஜி போனின் ஸ்டோரேஜ் விபரம்

ரியல்மி 10 4ஜி போனின் ஸ்டோரேஜ் விபரம்

இருப்பினும், இந்த புதிய ஸ்மார்ட்போனில் LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் அம்சம் இடம்பெறுவது உறுதி என்று டிப்ஸ்டர் தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் ரேம் அம்சத்திற்கு மேல் 5ஜிபி வரை எக்ஸ்டர்னல் ரேம் ஆதரவும் கிடைக்கும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

இந்த Realmeஸ்மார்ட்போனின் டிசைன் ரெண்டர்கள் சில தினங்களுக்கு முன் இணையத்தில் லீக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் டிசைன்

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் டிசைன்

இந்த வரவிருக்கும் புதிய ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒரு தட்டையான பிரேம் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் பிங்க் மற்றும் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டூயல் கேமரா அமைப்புடன், இரண்டு பெரிய வட்ட வடிவ கட்அவுட்கள் உடன் வெளிவரும் என்பதை ரெண்டர் புகைப்படங்கள் காண்பிக்கின்றன.

இதன் பின் பேனலில் உள்ள உரை 50MP பிரதான கேமரா சென்சார் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.

அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!

Realme 10 4G விலை என்னவாக இருக்கும்?

Realme 10 4G விலை என்னவாக இருக்கும்?

நமக்குக் கிடைத்த ஹார்டுவேர் தகவலை வைத்துப் பார்க்கையில், இந்தியாவில் Realme 10 4G விலை ரூ.17,000 முதல் ரூ.19,000 என்ற வரம்பிற்குள் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் ஆரம்ப சலுகைகளுடன், அடிப்படை மாடலின் விலை சுமார் ரூ.15,000 என்ற விலையில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதே நெருக்கமான விலை வரம்பிற்குள் 5ஜி டிவைஸ்களே கிடைப்பதனால், இதன் வியாபாரம் இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Realme 10 4G Budget Smartphone Price and Specifications Leaked Before India Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X