Home
News

மே 2 முதல்.. Amazon கிரேட் சம்மர் சேல்.. iPhone 13 முதல் Redmi 13C வரை.. என்னென்ன போன்கள் மீது எவ்வளவு ஆஃபர்?

ஒவ்வொரு ஆண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் சிறப்பு விற்பனைகளில் ஒன்றான அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 ஆனது எப்போது தொடங்கும் என்கிற தேதியோடு சேர்த்து, இந்த விற்பனையில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கும் என்கிற பட்டியலும் பகிரப்பட்டுள்ளது.

எப்போது தொடங்கும்? 2024 ஆம் ஆண்டிற்கான அமேசான் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale 2024) ஆனது மே 2 ஆம் தேதி மதியம் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்த சிறப்பு விற்பனை சரியாக எப்போது முடியும் என்கிற தேதியை அமேசான் அறிவிக்கவில்லை. அதுகுறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மே 2 முதல்.. Amazon கிரேட் சம்மர் சேல்.. என்னென்ன போன்கள் மீது ஆஃபர்?

என்னென்ன போன்கள் மீது டிஸ்கவுண்ட் கிடைக்கும்? அமேசான் கிரேட் சம்மர் சேல் ஆனது மே 2 தொடங்கும் என்கிற அறிவிப்போடு சேர்த்து இந்த விற்பனையின் போது என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும் என்கிற ஒரு பட்டியலும் அமேசான் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் சரியான தள்ளுபடி விலைகள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, என்னென்ன மாடல்கள் மீது தள்ளுபடி கிடைக்கும் என்கிற விவரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. அதன்படி ஐபோன் 13 (iPhone 13), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4), ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G), சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையின்கீழ் வாங்க கிடைக்கும்.

மேலும் ரியல்மி நார்சோ 70 5ஜி (Realme Narzo 70 5G), ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G), ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G), போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G), ஹானர் எக்ஸ்9பி 5ஜி (Honor X9b 5G), டெக்னோ பாப் 8 (Tecno Pop 8) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மீதும் பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கும்,.

ஸ்மார்ட்போன்களை தவிர்த்து.. 2024 அமேசான் கிரேட் சம்மர் சேலின் போது ஸ்மார்ட் டிவிகள் (Smart TVs) மீது 65% தள்ளுபடியும், ஏசி (AC) மாடல்கள் மீது 55% தள்ளுபடியும், பிரிட்ஜ்கள் (Refrigirators) மீது 55% தள்ளுபடியும், வாஷிங் மெஷின்கள் (Washing Machines) மீது 65% தள்ளுபடியும், ப்ரொஜெக்டர்கள் (Projectors) மீது 60% தள்ளுபடியும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டிவிகள் மீதான ஆபர்களை பொறுத்தவரை.. 43-இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4கே விவிட் ப்ரோ அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (43-inch Samsung Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV) ஆனது ரூ.49,900 க்கு பதிலாக ரூ.35,990 க்கு வாங்க கிடைக்கும்.

இதேபோல 32-இன்ச் ரெட்மி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி (32-inch Redmi F Series HD Ready Smart LED Fire TV) ஆனது அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024-ன் போது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும்.

மேலும் 5-இன்ச் டிசிஎல் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (55-inch TCL 4K Ultra HD Smart QLED Google TV) ஆனது ரூ.1,29,990 க்கு பதிலாக வெறும் ரூ.38,990 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 55-இன்ச் எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (55-inch LG 4K Ultra HD Smart LED TV) ஆனது ரூ.71,990 க்கு பதிலாக வெறும் ரூ.42,990 க்கு வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Ready for Biggest Offers on Mobile Smart TV AC 2024 Amazon Great Summer Sale Starts on May 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X