Home
News

ஐபோன் வெடித்ததை தொடர்ந்து விற்பனை சரிவு - ஊழியர்களுக்கு கடிதம் எழுதிய டிம் குக்.!

ஐபோன் விற்பனை குறைந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வியாபாரம் புதிய சாதனையை எட்டியுள்ளது என்று தான் கூறவேண்டும்

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு தொடர்ந்து பல்வேறு தவறான விமர்சனங்கள் பரப்பப்படுகிறது, காரணம் சமீபத்தில் வெளிவந்த ஐபோன் எக்ஸ் மாடல்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததுள்ளது. பின்பு இந்த ஆப்பிள் ஐபோன் சாதனங்களின் விலை உயர்வாக இருக்கிறது, இருந்தபோதிலும் புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெறவில்லை என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஐபோன் வெடித்ததை தொடர்ந்து விற்பனை சரிவு - ஊழியர்களுக்கு கடிதம் .!

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. அந்த சமயம் ஐபோன்களில் மென்பொருள் பிரச்சனை இருந்ததாக பல்வேறு வாடிக்கையாளர்கள்
குற்றம் தெரிவித்தனர்.

 ஐபோன் மாடல்களின் விற்பனை

ஐபோன் மாடல்களின் விற்பனை

பின்பு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலக்கட்டங்களில் புதிய ஐபோன் மாடல்களின் விற்பனை மிகவும் சரிந்துள்ளது. இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களில் இல்லாத அளவு, தனது வருவாய் லாப கணிப்பை முதல் முறையாக குறைத்துள்ளது.

கடிதம்

கடிதம்

மேலும் ஐபோன் விற்பனை குறைந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வியாபாரம் புதிய சாதனையை எட்டியுள்ளது என்று தான் கூறவேண்டும். பின்பு ஐபோன் விற்பனை சரிவை
தொடர்ந்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார், அதில் அவர் என்ன கூறினார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

 சீனா

சீனா

டிம் குக் தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் விடுமுறை காலாண்டு வாக்கில் ஆப்பிள் வருவாய் கணிப்பு மாற்றப்படுவதாக தெரிவித்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஐபோன்களின் விற்பனை சரிந்தது தான், குறிப்பாக சீனாவில் ஐபோன் விற்பனை குறைந்திருக்கிறது.

 ஐபேட்

ஐபேட்

பின்பு காலாண்டில் வருவாய் கணிப்பு குறைந்திருப்பது பின்னடைவாக இருந்தாலும், நமது சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வணிகம் மூலம் வரலாற்று சிறப்புமிக்க வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஐபேட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.

ஆக்டிவேஷன் அமெரிக்கா

ஆக்டிவேஷன் அமெரிக்கா

குறிப்பாக ஐபோன் ஆக்டிவேஷன் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்துமஸ் தின சாதனையை முறியடித்திருக்கிறது, இதுபோன்று அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மேற்கு ஐரோப்பா, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் கொரியா, வியட்நாம் போன்ற ஆசிய பசிபிக் பகுதிகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலை மாறும்

இந்த நிலை மாறும்

புதிய ஐபோன்களிலன் மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கண்டுபிடிப்புகளால் நாம் பெருமை கொள்ள முடியும், இதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது, முதல் காலாண்டில் ஐபோன் விற்பனையில் சாதனை படைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வெளிப்புற சூழல் நமக்கு அதிகமாக அழுத்தம் தரலாம், எனினும் அவற்றை நாம் விலக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிறகு இந்த நிலை மாறும் எனவும், இந்த சூழல் நாம் கற்றுக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், நம் பலத்தை ஒன்று திரட்டி ஆப்பிள் குறிக்கோளை நிலைநிறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று டிம் குக் அவர்கள் கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Read Tim Cook’s Memo to Employees About iPhone Sales Slowdown: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X